/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதிய சாப்ட்வேர் பிரச்னைக்கு தீர்வு; அஞ்சலக வாடிக்கையாளர்கள் நிம்மதி
/
புதிய சாப்ட்வேர் பிரச்னைக்கு தீர்வு; அஞ்சலக வாடிக்கையாளர்கள் நிம்மதி
புதிய சாப்ட்வேர் பிரச்னைக்கு தீர்வு; அஞ்சலக வாடிக்கையாளர்கள் நிம்மதி
புதிய சாப்ட்வேர் பிரச்னைக்கு தீர்வு; அஞ்சலக வாடிக்கையாளர்கள் நிம்மதி
ADDED : ஆக 11, 2025 11:01 PM

வால்பாறை; அஞ்சலகத்தில் ஒரு வாரத்துக்கு பின், சர்வர் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
அஞ்சல்துறை சேவையை விரிவுபடுத்த, அதன் மென்பொருள் ஏ.பி.டி. -2.O அட்வான்ஸ் போஸ்ட்டல் டெக்கானாலஜி தொழில்நுட்பத்திற்கு தரம் உயர்த்தப்பட்டது.
இதற்காக, கடந்த 2ம் தேதி பரிவர்த்தனை இல்லாத நாள் என அறிவித்து, அன்று அனைத்து அஞ்சல்சேவை நிறுத்தி வைக்கப்பட்டு, புதிய சாப்ட்வேர் தரம் உயர்த்தப்பட்டு, 4ம் தேதி பயன்பாட்டிற்கு வந்தது.
ஆனால், அதை இயக்குவதற்கான, சர்வர் வேகத்தில் இல்லாததால், வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர். வால்பாறையில், ஏற்கனவே 'நெட் ஒர்க்' பிரச்சனையால் பல அஞ்சலங்களில் பணிகள் பாதிக்கப்பட்ட நிலையில், புதிய சாப்ட்வேர் சரிவர செயல்படாததால், கடந்த ஒரு வாரமாக அஞ்சலக சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. வாடிக்கையாளர்கள் அஞ்சலகம் வந்து, ஏமாற்றத்துடன் திரும்பினர்.
பதிவு, விரைவு தபால், பார்சல், மணியார்டர் உள்ளிட்டவற்றை 'புக்கிங்' செய்ய முடியாமல் சிரமப்பட்டனர். இந்நிலையில், நேற்று காலை வால்பாறை நகரில் உள்ள அஞ்சலகத்தில் புதிய சாப்ட்வேர் செயல்பட்டது. ஒரு வாரத்துக்கு பின், சர்வர் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
அஞ்சல அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறையில், ஒரு வாரத்திற்கு பின், புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய சாப்ட்வேர் செயல்படத்துவங்கியது. ரயில்வே டிக்கெட் புக்கிங் வழக்கம் போல் செய்யப்பட்டது. இனி வாடிக்கையாளர்களுக்கு வழக்கம் போல் எல்லா சேவைகளும் தொடரும்,' என்றனர்.

