/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வரும் 4ம் தேதி முதல் புதிய மென்பொருள்; ஆர்.எஸ்.புரம் போஸ்ட் ஆபீசில் அமல்
/
வரும் 4ம் தேதி முதல் புதிய மென்பொருள்; ஆர்.எஸ்.புரம் போஸ்ட் ஆபீசில் அமல்
வரும் 4ம் தேதி முதல் புதிய மென்பொருள்; ஆர்.எஸ்.புரம் போஸ்ட் ஆபீசில் அமல்
வரும் 4ம் தேதி முதல் புதிய மென்பொருள்; ஆர்.எஸ்.புரம் போஸ்ட் ஆபீசில் அமல்
ADDED : ஜூலை 30, 2025 09:29 PM
கோவை; கோவை ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் மற்றும் அதன் கீழ் உள்ள துணை, கிளை தபால் நிலையங்களில், வரும் 4ம் தேதி புதிய மென்பொருள் தரம் உயர்த்தப்பட உள்ளது.
இந்திய தபால் துறையின் மென்பொருள், ஏற்கனவே, கோவை தலைமை தபால் நிலையம் மற்றும் அதன் கீழ் இயங்கும் அனைத்து துணை, கிளை தபால் நிலையங்களில் தரம் உயர்த்தப்பட்டு விட்டது.
வரும் 4ம் தேதி முதல் ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் மற்றும் அதன் கீழ் இயங்கும் அனைத்து துணை, கிளை தபால் நிலையங்களில் தரம் உயர்த்தப்பட உள்ளது.
இந்த புதிய தரம் உயர்த்தப்பட்ட மென்பொருளில் ' க்யூஆர்' வாயிலாக பணம் செலுத்தும் வசதி உட்பட பல்வேறு புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
புதிய மென்பொருள் பயன்பாடு எவ்வித சிரமம் இன்றி செயல்படுத்த, வரும் 2ம் தேதி, பரிவர்த்தனை இல்லா நாளாக அறிவிக்கப்பட்டது.
எனவே, அன்று ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் மற்றும் அதன் கீழ் இயங்கும் அனைத்து துணை, கிளை தபால் நிலையங்களில், தபால் சிறு சேமிப்பு கணக்குகளில் முதலீடு செய்வது மற்றும் கணக்கில் இருந்து பணம் எடுப்பது ஆகிய சேவைகளை பெற இயலாது. பதிவுத் தபால், விரைவுத் தபால், பார்சல் அனுப்புவது போன்ற சேவைகளும், வரும் 2ம் தேதி பெற இயலாது.
கோவை தலைமை தபால் நிலையம் மற்றும் அதன் கீழ் இயங்கும் துணை, கிளை தபால் நிலையங்கள் வாயிலாக, வரும் 2ம் தேதி, பொதுமக்கள் தபால் சேவைகளை வழக்கம் போல் பெற்றுக் கொள்ளலாம்.
அன்று, ஆதார் சேவைகள், அனுமதிக்கப்பட்ட அனைத்து தபால் நிலையங்களில், வழக்கம் போல் செயல்படும்.
பொதுமக்கள் இந்த மென்பொருள் தரம் உயர்த்துவதில் ஆதரவு அளிக்க வேண்டும் என, கோவை தபால் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.