ADDED : மார் 18, 2026 04:26 AM
அ நிறம் | அளவு
கோவை: சசிகலாவின் தீவிர ஆதரவாளராக இருந்த பெங்களூரு புகழேந்தி, ஓ.பி.எஸ். ஆதரவாளராக மாறினார். தற்போது,புரட்சி அ.தி.மு.க. என்ற கட்சியை துவக்கி, தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
அவர் கோவையில் நேற்று கூறியதாவது:
அ.தி.மு.க.வை கபளீகரம் செய்ய திட்டமிட்டு, அதை உடைப்பதில் பா.ஜ. வென்றுவிட்டது. அ.தி.மு.க. பொது செயலாளர் பழனிசாமி பா.ஜ.விடம் கெஞ்சிக் கொண்டுள்ளார். உடன் இருந்த எனக்கு பழனிசாமி பற்றி முழுமையாக தெரியும்.
தென் மாவட்ட மக்கள் பழனிசாமியை நிராகரிப்பர். பழனிசாமியால் வேலுமணியும் தோற்கப் போகிறார். தி.மு.க. முழு வெற்றி பெறும். எதிர்க்கட்சி அந்தஸ்தும் தி.மு.க. கூட்டணியில் உள்ள காங். அல்லது வி.சி.க.வுக்கு தான் கிடைக்கும். இவ்வாறு, புகழேந்தி கூறினார்.
