/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உயர்கல்வியில் புதிய தொழில்நுட்பங்கள்; சி.ஐ.ஐ., 8வது மாநாடு இன்று துவங்குகிறது
/
உயர்கல்வியில் புதிய தொழில்நுட்பங்கள்; சி.ஐ.ஐ., 8வது மாநாடு இன்று துவங்குகிறது
உயர்கல்வியில் புதிய தொழில்நுட்பங்கள்; சி.ஐ.ஐ., 8வது மாநாடு இன்று துவங்குகிறது
உயர்கல்வியில் புதிய தொழில்நுட்பங்கள்; சி.ஐ.ஐ., 8வது மாநாடு இன்று துவங்குகிறது
ADDED : நவ 14, 2024 09:16 PM
கோவை; இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) சார்பில், தேசிய அளவிலான உயர்கல்வி மாநாடு மற்றும் கண்காட்சி கொடிசியாவில் இன்று துவங்குகிறது.
சி.ஐ.ஐ., கோவை சார்பில், ஆண்டுதோறும் தேசிய அளவிலான உயர்கல்வி மாநாடு நடக்கிறது. நடப்பாண்டு 8வது மாநாடு, கொடிசியாவில் இன்று காலை 10:30 மணிக்கு துவங்குகிறது. மாநாடு துவக்க விழாவில், தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன், கூடுதல் தலைமைச் செயலர் கோபால் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
சி.ஐ.ஐ., கோவை முன்னாள் தலைவரும், மாநாட்டுத் தலைவருமான செந்தில் கணேஷ் கூறியதாவது:
தேசிய உயர்கல்வி மாநாட்டுடன், இம்முறை கண்காட்சியும் நடக்கிறது. 15ம் தேதி துவங்கி 17ம் தேதிவரை மூன்று நாட்கள் நடக்கிறது. கண்காட்சி உயர்கல்வி மாநாடு என இரு பிரிவுகளாக நடக்கிறது. கண்காட்சியில் 60க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
ஏராளமான தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ளன. அவற்றை உயர்கல்வி நிறுவனங்கள் கற்பித்தலில் எப்படிப் பயன்படுத்தலாம் என்பதை விளக்கும் மாநாடாக இது இருக்கும். மாநாட்டில் 23 நிபுணர்கள் பங்கேற்று, புதிய தொழில்நுட்பங்களைக் கற்பித்தலில் பயன்படுத்துவது குறித்து, நேரடி செயல்விளக்கத்துடன் பேசவுள்ளனர். உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
மாநாட்டின் 2ம் நாளின் பிற்பகுதியில் இருந்து, நிறுவனங்கள் தங்களின் புதிய தொழில்நுட்பங்களைச் செயல்விளக்கம் காண்பிதற்கான பயிலரங்கு தனியே நடக்கிறது.
கண்காட்சியில் பள்ளி மாணவர்களும் பங்கேற்கலாம்; மாநாட்டுக்கு அனுமதி இல்லை. மாநாட்டில் பங்கேற்க முன்பதிவு அவசியம்.
கல்லூரிகள் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.