தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ புதிய ரயில்களுக்கு அனுமதி ; பயணியர் மகிழ்ச்சி 

 புதிய ரயில்களுக்கு அனுமதி ; பயணியர் மகிழ்ச்சி 

 புதிய ரயில்களுக்கு அனுமதி ; பயணியர் மகிழ்ச்சி 


ADDED : மார் 07, 2026 06:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 07, 2026 06:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி வழியாக, புதியதாக மூன்று ரயில்கள் இயக்க மத்திய ரயில்வே அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளதால், ரயில் பயணியர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பொள்ளாச்சி - கோவை வழித்தடத்தில், பொள்ளாச்சி - கோவைக்கு காலை மற்றும் மாலை நேரத்திலும், மதுரை - கோவை ரயில், திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. பாலக்காடு - திண்டுக்கல் ரயில் பாதையில், திருச்செந்துார் ரயில், திருவனந்தபுரம் - ராமேஸ்வரம் அமிர்தா எக்ஸ்பிரஸ், பாலக்காடு - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்கள், துாத்துக்குடி - மேட்டுப்பாளையம், நாகர்கோவில் - நியூ ஜல்பாய் குரி அம்ரித் பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதில், மீட்டர் கேஜ் காலத்தில் இயக்கப்பட்ட ரயில்களை இயக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கடந்த வாரம் இணை ரயில்வே அமைச்சர் பொள்ளாச்சி வந்த போது, எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன், பாலக்காடு கோட்ட ரயில் பயனாளர் குழு உறுப்பினர் ஆனந்தகுமார், பொள்ளாச்சி ரயில் பயணியர் நலச்சங்கத்தினர், பல்வேறு அமைப்பினர், ரயில்களை இயக்க கோரிக்கை மனு கொடுத்து வலியுறுத்தினர்.

ரயில்வே இணை அமைச்சரும், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இச்சூழலில், நேற்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் புதியதாக ரயில்களை இயக்க அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், பொள்ளாச்சியின் நீண்ட கால கோரிக்கையான, பொள்ளாச்சி - பாலக்காடு மெமு ரயில் இயக்கப்படுவதுடன், கூடுதலாக இரண்டு ரயில் பொள்ளாச்சி வழியாக இயக்கப்படுவதால் ரயில் பயணியர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பாலக்காடு கோட்ட ரயில் பயனாளர் குழு உறுப்பினர் கூறுகையில், ''ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.திருநெல்வேலி - மங்களூரு ரயில், ராமேஸ்வரம் - மங்களூரு விரைவு ரயில், மதுரை, திண்டுக்கல், பழநி, பொள்ளாச்சி வழியாக இயக்கப்படவுள்ளது.

பொள்ளாச்சி - பாலக்காடு மெமு ரயில் இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்த ரயில் இயக்கப்பட்டால், திருச்சூர், குருவாயூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பயணியருக்கு பயனாக இருக்கும்.

நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்துள்ளது வரவேற்கதக்கது,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us