/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பயன்பாட்டுக்கு வந்தது புதிய டிரான்ஸ்பார்மர்
/
பயன்பாட்டுக்கு வந்தது புதிய டிரான்ஸ்பார்மர்
ADDED : ஜூன் 08, 2025 09:56 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே கோட்டாம்பட்டியில், 7 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய டிரான்ஸ்பார்மர் இயக்கி வைக்கப்பட்டது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், பொள்ளாச்சி கோட்டத்தில், தடையின்றி மின்விநியோகம் செய்ய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, உயரழுத்த, குறைவழுத்த குறைபாடுகளை தவிர்க்க, ஆங்காங்கே புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்படுகிறது.
அவ்வகையில், கோட்டாம்பட்டியில், குறைவழுத்தம் காரணமாக, சீரான மின்விநியோகம் தடைபட்டது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் பொருட்டு, அங்கு, 7 லட்சம் ரூபாய் மதிப்பில், 63 கே.வி.ஏ., திறனுடைய புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது.
தற்போது, பயன்பாட்டிற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்வாயிலாக, வி.என்.டி., நகர் உள்ளிட்ட பகுதிகளைச்சேர்ந்த 100 வீடுகளுக்கு தடையின்றி மின் சப்ளை இருக்கும் என, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.