தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கூடுதல் வசதிகளுடன் உக்கடம் புது பஸ் ஸ்டாண்ட் திறப்பு

 கூடுதல் வசதிகளுடன் உக்கடம் புது பஸ் ஸ்டாண்ட் திறப்பு

 கூடுதல் வசதிகளுடன் உக்கடம் புது பஸ் ஸ்டாண்ட் திறப்பு


ADDED : மார் 14, 2026 06:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2026 06:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உக்கடம்: உக்கடம் பழைய பஸ் ஸ்டாண்ட் அதிக வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

டவுன் பஸ்கள் இயக்க ஓரிடம், பொள்ளாச்சி, பழனி, பாலக்காடு பஸ்கள் இயக்குவதற்கு ஓரிடம் என இரண்டு முனையங்களை மாநகராட்சி கட்டுகிறது.

மேம்பாலத்தின் இறங்கு தளம் அருகே முனையம் கட்டப்பட்டது. 28 பஸ்கள் நிறுத்த ரேக், 7 கடைகள், உணவகங்கள் கட்டப்பட்டுள்ளன. 10 பெட்டிக்கடைகள் நடத்த வசதி செய்யப்பட்டு உள்ளது. கழிப்பறை, தாய்மார்கள் பாலுாட்டும் அறை அமைக்கப்பட்டிருக்கிறது.இந்த பஸ் ஸ்டாண்ட்டை, சென்னையில் இருந்து காணொளி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்தார். இதேபோல், கவுண்டம்பாளையம், கணபதி மாநகரில் தலா ரூ.3.36 கோடியில் கட்டியுள்ள முதல்வர் படைப்பகத்தையும் திறந்து வைத்தார்.

உக்கடத்தில் நடந்த இதற்கான நிகழ்ச்சியில் மேயர் ரங்கநாயகி, கலெக்டர் பவன்குமார், கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். உக்கடம் பஸ் ஸ்டாண்ட், படைப்பகம் வீடியோ ஒளிபரப்பப்பட்டது.

தற்போது பஸ் ஸ்டாண்ட் செயல்படும் இடத்தில், முனையம்-2 கட்ட வேண்டும். கடைகள் மட்டும் கட்டப்பட்டுள்ளன. ரேக்குகள், இதர வசதிகள் செய்ய, அனைத்து பஸ்களையும் தற்காலிகமாக முனையம்-1ல் இருந்து இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதற்கேற்ப உக்கடம் சந்திப்பில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டது. முனையம்-1 பஸ் ஸ்டாண்ட்டுக்கு, உக்கடம் சந்திப்பு ரவுண்டானாவை கடந்து, பழைய மீன் மார்க்கெட் இருந்த இடத்தில் போட்டுள்ள ரோட்டில் பஸ்கள் திரும்பி வர வேண்டும். ஈச்சனாரி, பொள்ளாச்சி, பாலக்காடு செல்ல வேண்டிய பஸ்கள், வலதுபுறம் திரும்பிச் செல்ல வேண்டும். அச்சமயத்தில், ஒப்பணக்கார வீதியை நோக்கி வாகனங்கள் வரும். அதேபோல், டவுன்ஹாலில் இருந்து உக்கடத்தை கடந்து செல்லும் வாகனங்கள் வரும். வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் சூழல் உருவாகும். போக்குவரத்து நெருக்கடி ஏற்படும். எந்நேரமும் போலீசார் நின்று, போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். இது போலீசாருக்கு தலைவலியை உருவாக்கியிருக்கிறது. மாற்று ஏற்பாடுகளை செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us