/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேளாண் திட்டத்துக்கு புதிய கிராமங்கள் தேர்வு
/
வேளாண் திட்டத்துக்கு புதிய கிராமங்கள் தேர்வு
ADDED : ஏப் 09, 2025 12:13 AM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு ஒன்றியத்தில், கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 2025 -- 26ல் புதிதாக, மெட்டுவாவி, நெ.10.முத்தூர், அரசம்பாளையம், வரதனூர், செட்டியக்காபாளையம், தேவனாம்பாளையம், கொண்டம்பட்டி ஆகிய, 7 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்த ஊராட்சியில் உள்ள விவசாயிகளுக்கு, வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த பிற துறைகள் திட்டங்கள், 80 சதவிகிதம் ஒதுக்கீடு செய்யப்படும். கிராமப்புறங்களில் உள்ள நீரோடையை சுத்தம் செய்தல், தரிசு நிலத்தை மேம்படுத்துதல், நீர்ப்பாசன வசதியை உருவாக்குதல், வேளாண் சார்ந்த உப தொழில் தொடங்குபவர்களை ஊக்குவித்தல், கிராமப் பகுதிகளில் உலர் களம் அமைத்தல் மற்றும் மத்திய மாநில அரசு திட்டங்கள் போன்றவைகளை விவசாயிகள் பெற, உழவன் செயலி வாயிலாக முன் பதிவு செய்யலாம்.
மேலும், திட்டங்கள் குறித்த சந்தேகங்கள் மற்றும் விளக்கங்கள் பெற அந்தந்த பகுதி வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ள வேண்டும். இத்தகவலை, கிணத்துக்கடவு வேளாண் உதவி இயக்குனர் அனந்தகுமார் மற்றும் துணை வேளாண் அலுவலர் மோகனசுந்தரம் ஆகியோர் தெரிவித்தனர்.

