/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புத்தாண்டு கொண்டாட்டம்; விடுதிகளுக்கு எச்சரிக்கை
/
புத்தாண்டு கொண்டாட்டம்; விடுதிகளுக்கு எச்சரிக்கை
ADDED : டிச 31, 2024 06:23 AM

வால்பாறை : புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, விதிமுறையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
தொடர் விடுமுறையால் வால்பாறைக்கு, சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்துள்ளனர். இந்நிலையில் தங்கும் விடுதி உரிமையாளர்கள் கூட்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் போலீசார் பேசியதாவது:
சுற்றுலா பயணியர் புத்தாண்டை பாதுகாப்பாக கொண்டாட வேண்டும். பெரும்பாலான தங்கும் விடுதிகள் குடியிருப்பு பகுதியை ஒட்டி உள்ளதால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் புத்தாண்டு கொண்டாட வேண்டும். முறையான ஆவணங்கள் இல்லாமல் சுற்றுலா பயணியரை விடுதியில் தங்க அனுமதிக்க கூடாது.
இரவு, 12:00 மணிக்கு மேல் ரோட்டில் புத்தாண்டு கொண்டாட அனுமதியில்லை. மது அருந்தி விட்டு வாகனங்களை இயக்கினால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் அமைதியான முறையில் புத்தாண்டை சுற்றுலா பயணியரும், உள்ளூர் மக்களும் கொண்டாட வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.