/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதிதாக கட்டப்படும் மாதேஸ்வரர் கோவில்; ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு
/
புதிதாக கட்டப்படும் மாதேஸ்வரர் கோவில்; ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு
புதிதாக கட்டப்படும் மாதேஸ்வரர் கோவில்; ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு
புதிதாக கட்டப்படும் மாதேஸ்வரர் கோவில்; ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு
ADDED : மே 01, 2025 11:49 PM

மேட்டுப்பாளையம்; குட்டையூரில் மலை மீதுள்ள, மிகவும் பழமையான மாதேஸ்வரர் கோவிலை இடித்துவிட்டு, புதிதாக கட்ட ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
மேட்டுப்பாளையம்-காரமடை சாலையில், குட்டையூர் மாதேஸ்வரர் மலை உள்ளது. இந்த மலை மீது, 200 ஆண்டுகள் பழமையான மாதேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்டதாகும். கோவில் சிதிலம் அடைந்து இருப்பதால், புதிதாக கோவிலை கட்டுவதற்கு, பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். தமிழக அரசு ஹிந்து சமய அறநிலையத் துறை, புதிதாக கோவில் கட்ட அனுமதி வழங்கி உள்ளது.
இதை அடுத்து என்.சி. அரோமேட்டிக்ஸ் சேர்மன் கிருஷ்ணசாமி தலைவராகவும், முன்னாள் ஊராட்சி தலைவர் பழனிசாமி செயலாளராகவும், சாய்ராம் மஹால் கோபால் பொருளாளர் ஆகவும், புதிதாக திருப்பணி கமிட்டியினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கோவில் திருப்பணி ஆலோசனை கூட்டம், சிறுமுகை சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு பொருளாளர் கோபால் தலைமை வகித்தார். செயலாளர் பழனிசாமி, உறுப்பினர்கள் முரளி பாபு, சுந்தரம் பாபு, குண்டையூர் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தற்போதுள்ள சிதிலமடைந்துள்ள கல்கோவிலை இடித்துவிட்டு, ஹிந்து சமய அறநிலைத்துறை அனுமதியின் பேரில், புதிதாக கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம், நந்தி மண்டபம் ஆகியவை கட்டுவது, கொடிமரம், படிக்கட்டுகள் சீரமைப்பது. மலை மீது உள்ள கோவிலுக்கு பக்தர்கள் வாகனங்களில் வந்து செல்ல சாலை வசதி ஆகியவை அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஒவ்வொரு திருப்பணிகளையும், உபயதாரர், நன்கொடையாளர்கள் செய்து கொடுக்க, தேர்வு செய்வது குறித்து பேசப்பட்டது. மேலும் குறிப்பிட்ட காலத்திற்குள் கோவிலை கட்டி முடிக்க கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் எம்.எல்.ஏ., செல்வராஜ், கோவில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பையன், உறுப்பினர்கள் கிருஷ்ணகுமார், ஜெயமணி, மஞ்சுளா, ரங்கசாமி, குட்டையூர் ஊர் கவுடர் மகாலிங்கம் உள்பட பலர் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜ் நன்றி கூறினார்.

