/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதிதாக வாங்கிய இயந்திரம் பழுது; ரூ.33.92 லட்சம் திருப்பி தர உத்தரவு
/
புதிதாக வாங்கிய இயந்திரம் பழுது; ரூ.33.92 லட்சம் திருப்பி தர உத்தரவு
புதிதாக வாங்கிய இயந்திரம் பழுது; ரூ.33.92 லட்சம் திருப்பி தர உத்தரவு
புதிதாக வாங்கிய இயந்திரம் பழுது; ரூ.33.92 லட்சம் திருப்பி தர உத்தரவு
ADDED : ஜூன் 26, 2025 11:31 PM
கோவை; புதிதாக வாங்கிய இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால், அதற்கான தொகை, 33.92 லட்சம் ரூபாயை திருப்பி கொடுக்க உத்தரவிடப்பட்டது.
கோவை, பெ.நா.பாளையம், பாலமலை ரோட்டை சேர்ந்தவர் சம்பத்குமார்; குஜராத் மாநிலம், ஆமதாபாத்திலுள்ள 'ருத்ரா எக்ஸ்டிரசன் டெக்னிக்' என்ற நிறுவனத்திடம் பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கும் இயந்திரம் வாங்க, கடந்த 2023ல் ஆர்டர் கொடுத்தார். அதற்கான விலை, 33.92 லட்சம் ரூபாய் செலுத்தினார். இயந்திரத்தை லாரியில் அனுப்பிவைத்தனர். கோவைக்கு வந்த பிறகு இயந்திரத்திலுள்ள உதிரி பாகங்கள் உடைந்து காணப்பட்டது. சில பாகங்களை காணவில்லை.
இது குறித்து அந்நிறு வனத்துக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து இன்ஜினியரை அனுப்பிவைத்தனர். இயந்திரத்தை பொருத்தி இயக்கி சோதனை ஓட்டம் நடத்திய போது சில கருவிகள் உடைந்து விழுந்தன. இதனால், இயந்திரம் இயக்கப்படாமல் முடக்கப்பட்டது. இயந்திரம் வாங்க வங்கியில் பெற்ற கடனை செலுத்த முடியாமல் சிரமத்திற்கு ஆளானார். இயந்திரத்தை திரும்ப எடுத்துக்கொண்டு, பணத்தை தருமாறு கேட்ட போது மறுத்துவிட்டனர்.
இதனால், மன உளைச்சலுக்கு ஆளான சம்பத்குமார், கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல், உறுப்பினர்கள் மாரிமுத்து, சுகுணா ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், 'மனுதாரரிடம் எந்திரத்துக்கு பெற்ற, 33. 92 லட்சம் ரூபாயை சம்பந்தப்பட்ட நிறுவனம் திருப்பி கொடுக்க வேண்டும். பணம் கொடுத்த பிறகு, இயந்திரத்தை எடுத்து செல்லலாம். மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 10,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்கு வேண்டும்' என்று உத்தர விட்டுள்ளனர்.