ADDED : ஜூலை 03, 2025 08:55 PM
தேனீ வளர்க்க பயிற்சி
வேளாண் பல்கலை பூச்சியியல் துறை சார்பில், வரும் 7ம் தேதி, தேனீ வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. கட்டணம் வரிகள் உட்பட ரூ.590. மேலும் விவரங்களுக்கு 0422-6611214 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
காளான் வளர்க்க பயிற்சி
வேளாண் பல்கலை பயிர் நோயியில் துறை சார்பில், வரும் 7ம் தேதி, காளான் வளர்க்க பயிற்சி அளிக்கப்படுகிறது. கட்டணம் வரிகள் உட்பட ரூ. 590. மேலும் விவரங்களுக்கு 96294 96554, 63792 98064 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
காலநிலை தரவு பகுப்பாய்வு
வேளாண் பல்கலையில், வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் சார்பில், காலநிலை தரவுகளை பகுப்பாய்வு செய்தல் தொடர்பான, தேசிய அளவிலான 5 நாள் பயிலரங்கு நடந்தது. தெலுங்கானா, மஹாராஷ்டிரா, ஜம்மு-காஷ்மீர், டில்லி, கேரளா, கர்நாடகா, உத்தரகண்ட், தமிழகம் ஆகிய, எட்டு மாநிலங்களில் இருந்து, 15 பல்கலை மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர்.
காலநிலை மாற்ற தாக்கங்களைப் புரிந்து கொள்வதற்கும், குறைப்பதற்கும், முன்னறிவிப்பு, பேரிடர் மேலாண்மை, விவசாயம், ஏ.ஐ., உள்ளிட்டவை சார்ந்து பகுப்பாய்வு நடைமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
நேரு கல்லூரியுடன் ஒப்பந்தம்
தோட்டக்கலை பயிர்களில் நூற்புழுக்களை கண்டறிதல் மற்றும் மேலாண்மைக்கான செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் தீர்வுகளை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், வேளாண் பல்கலை மற்றும் நேரு கலை அறிவியல் இடையே மேற்கொள்ளப்பட்டது. பல்கலை துணைவேந்தர் (பொ) தமிழ்வேந்தன், பயிர் பாதுகாப்பு மைய இயக்குநர் சாந்தி, இணைப்பதிவாளர் தேவராஜன், நேரு கல்லூரி முதல்வர் விஜயகுமார், பேராசிரியர் சரண்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆப்பிரிக்க இன்ஜி.,களுக்கு பயிற்சி
மத்திய மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த 6 நீர்ப்பாசன பொறியாளர்களுக்கு, வேளாண் பல்கலையில் மூன்று மாத திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நீர்ப்பாசனம், மண் மற்றும் நீர் பாதுகாப்பு, விவசாய கட்டமைப்புகள், பண்ணை இயந்திரம், உயிரி ஆற்றல் ஆகியவற்றை உள்ளடக்கி பயிற்சி வழங்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, மோட்டார் பம்ப்கள் குறித்து, பல்வேறு கோணங்களில், உற்பத்தி தொழிற்சாலையில் நேரடி செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டது.