sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

செய்திகள் சில வரிகளில்...

/

செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...


ADDED : ஜூலை 04, 2025 10:26 PM

Google News

ADDED : ஜூலை 04, 2025 10:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளி வகுப்பறை திறப்பு


தொண்டாமுத்துார் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட குளத்துப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் ராஜ்யசபா எம்.பி., சி.வி.சண்முகம் தொகுதி மேம்பாட்டு நிதியில், புதிதாக நான்கு வகுப்பறைகள் கட்டப்பட்டன. அவற்றை தொண்டாமுத்துார் எம்.எல்.ஏ., வேலுமணி, பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

வளர்ச்சி பணிகள் துவக்கம்


சின்னியம்பாளையம் ஊராட்சியில், 35 லட்சத்து, 29 ஆயிரம் ரூபாயில், மேல்நிலை குடிநீர் தொட்டி, நிலத்தடி தொட்டி, ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு, மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டன. இவற்றை, மாவட்ட செயலாளர் முருகேசன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு துவக்கி வைத்தனர். 50 லட்சத்து 86 ஆயிரம் ரூபாயில், அங்கன்வாடி மையங்கள் கட்டுதல், கான்கிரீட் ரோடு அமைத்தல், தெருவிளக்குகள் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டன. காடாம்பாடி ஊராட்சியில் தார் ரோடு மேம்படுத்துதல், கலங்கல் ஊராட்சியில், ஒன்பது பணிகள் துவக்கப்பட்டன. சூலுார் பேரூராட்சியில், இரண்டு கோடியே, 9 லட்சம் ரூபாயில் மழைநீர் வடிகால் கட்டும் பணியும் துவக்கி வைக்கப்பட்டது.

கேந்திரிய பள்ளி திறப்பு


கருமத்தம்பட்டி அடுத்த கிட்டாம் பாளையம் ஊராட்சியில், 136வது பட்டாலியன் எல்லை பாதுகாப்பு படை உள்ளது. இங்குள்ள குடியிருப்புகளில், 1,000க்கும் மேற்பட்ட வீரர்களின் குடும்பத்தினர் வசிக்கின்றனர். அதிகாரிகள் மற்றும் வீரர்களின் குழந்தைகள், பல கி.மீ., தொலைவில் உள்ள, சூலுார் பி.எம். ஸ்ரீ கேந்திரிய வித்யாலயாவில் படித்து வந்தனர். இவர்களது சிரமத்தை போக்க, படை வளாகத்திலேயே கேந்திரிய வித்யாலயா பள்ளி துவக்கப்பட்டது. விழாவில், கமாண்டண்ட் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். ஐந்தாம் வகுப்பு வரையுள்ள இப்பள்ளியில், 200 மாணவ, மாணவியர் தங்கள் படிப்பை துவக்கினர்.

ரோட்டரி சார்பில் சீருடை வழங்கல்


தொண்டாமுத்துார் ரோட்டரி கிளப் சார்பில், பள்ளி மாணவியருக்கு இலவச சீருடை வழங்கும் நிகழ்ச்சி, தொண்டாமுத்துார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது; பள்ளி தலைமை ஆசிரியர் ரஹீமா பேகம் தலைமை வகித்தார்.

தொண்டாமுத்துார் ரோட்டரி கிளப் தலைவர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட திட்ட பிரதிநிதி சுஜாதா, மாணவியருக்கு சீருடை வழங்கினார். தொடர்ந்து, சின்மயா மிஷன் சிறுவாணி கிளை இயக்குனர் டாக்டர் மீரா, மாணவியர் கடைபிடிக்க வேண்டிய சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் குறித்து விளக்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ரோட்டரி கிளப் நிர்வாகிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவியர் பங்கேற்றனர்.

அ.தி.மு.க., ஆலோசனை


அ.தி.மு.க., பொதுச்செயலாளர், முன்னாள் முதல்வர் பழனிச்சாமி, 'மக்களை காப்போம்; - தமிழகம் மீட்போம்' என்கிற பிரசாரத்தை, 234 தொகுதிகளிலும் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். வரும், 7ம் தேதி காலை, மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவிலில் பிரசாரத்தை துவக்குகிறார். அன்றைய தினம் மேட்டுப்பாளையம் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.

இதுகுறித்த ஆலோசனை கூட்டம், அன்னுாரில் நேற்று நடந்தது. அ.தி.மு.க., கோவை வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., அருண்குமார் தலைமை வகித்தார். சரவணம்பட்டியில் நடத்தப்படும் கூட்டத்தில், அன்னுார் ஒன்றியத்தில் இருந்து அதிக அளவில் பங்கேற்பது என்றும், 'மக்களை காப்போம் - தமிழகத்தை மீட்போம்' தொடர் பிரச்சாரம் குறித்து அனைத்து கிராமங்களுக்கும் தெரிவிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில், மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us