/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மொழியை அடுத்த நூற்றாண்டுக்கு எடுத்து செல்பவர் எழுத்தாளர்; நாஞ்சில் நாடன் பேச்சு

ADDED : ஜூன் 23, 2014 10:42 PM
கோவை : ''மொழியை அடுத்த நுாற்றாண்டுக்கு கொண்டு செல்பவரும், காலத்துக்கு முன்னால் பயணம் செய்து கொண்டிருப்பவரும் தான் எழுத்தாளர்,'' என, கண்ணதாசன் விருது வழங்கும் விழாவில், எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பேசினார்.
'கோவை கண்ணதாசன் கழகம்' மற்றும் 'ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்' சார்பில், ஏழாம் ஆண்டு 'கண்ணதாசன் விழா' கிக்கானி மேல்நிலைப் பள்ளி, சரோஜினி கலையரங்கில் நடந்தது. மதுரை தியாகராஜர் குழு நிறுவனங்களின் தலைவர் கருமுத்துகண்ணன் தலைமை வகித்தார்.இந்தாண்டுக்கான 'கண்ணதாசன் விருது' பாடகி வாணிஜெயராம், எழுத்தாளர் ஜெயமோகன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பேசியதாவது:எழுத்தாளர் என்றால், தைரியமான படைப்பாளியாகவும், எழுத்து ஆளுமை கொண்டவராகவும் திகழ வேண்டும். கலையின் கடவுளாக திகழ்பவர் எழுத்தாளர்; மொழியை அடுத்த நுாற்றாண்டுக்கு கொண்டு செல்பவர்; காலத்துக்கு முன்னால் பயணித்துக் கொண்டிருப்பவர்.எழுத்து ஆளுமை கொண்ட எழுத்தாளர் மீது, விமர்சனம் வருவது இயல்பே. இந்த விமர்சனங்களுக்கு நேர்மையாக பதிலளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.விழாவில், பாடகி வாணிஜெயராம் பாடிய கண்ணதாசனின், 'ஸ்ரீ கிருஷ்ண கவசம்' 'சிடி'யை 'ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்' இயக்குனர் கிருஷ்ணன் வெளியிட்டார்.