தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மக்காச்சோளத்தை சூறையாடும் படைப்புழு! விவசாயிகளுக்கு வேளாண்துறை எச்சரிக்கை

மக்காச்சோளத்தை சூறையாடும் படைப்புழு! விவசாயிகளுக்கு வேளாண்துறை எச்சரிக்கை

மக்காச்சோளத்தை சூறையாடும் படைப்புழு! விவசாயிகளுக்கு வேளாண்துறை எச்சரிக்கை


ADDED : மே 13, 2019 05:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 13, 2019 05:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி:'ராபி பருவத்தில் மக்ககாச்சோள சாகுபடி செய்யும் விவசாயிகள், படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்,' என, தெற்கு வேளாண் துறை எச்சரித்துள்ளது.பொள்ளாச்சி தெற்கு வட்டாரத்தில், ஆண்டுதோறும் அக்., நவ., மாதங்களில், 500 - 550 எக்டர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக மாவட்ட அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் அதிகளவு மக்காச்சோளம் விளைவித்து, தெற்கு ஒன்றிய விவசாயிகள் முதல் இரண்டு பரிசுகள் பெற்றனர்.சாகுபடியில் சாதனை படைத்து வரும் விவசாயிகளுக்கு, கடும் சேதத்தை ஏற்படுத்தி, சோதனையாக, படைப்புழு தாக்குதல் மாறியது. ராபி பருவத்தில் மக்காச்சோள சாகுபடி செய்ய உள்ள தெற்கு வட்டார விவசாயிகள், நடப்பு காரிப் பருவத்திலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.தெற்கு வேளாண் உதவி இயக்குனர் நர்கீஸ் கூறியதாவது:அமெரிக்காவை பிறப்பிடமாக கொண்ட படைப்புழுவின் தாக்கம், நம் பகுதியில் கடந்தாண்டு ஏப்ரல் முதல் காணப்படுகிறது. விதைகள், பருவநிலை மாற்றங்களால் இப்புழு தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கருதுகின்றனர்.

படைப்புழுவின் முதிர்ச்சி பருவத்தில் இறக்கைகள் முளைத்து, ஒரு மணி நேரத்துக்கு, 100 - 150 கி.மீ., துாரம் பறக்கும். இவ்வாறே படைப்புழுக்கள் பரவியுள்ளன. பயிரின் இளம் பருவத்தில் படைப்புழு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.இயற்கை வழிமுறைஆழமான கோடை உழவு செய்தால், மண்ணில் உள்ள படைப்புழு முட்டைகளை அழிக்கலாம்.ஏக்கருக்கு, 100 கிலோ வேப்பம்புண்ணாக்கு இட வேண்டும்.

விதைக்கும் முன், ஒரு கிலோ விதைக்கு, 10 கிராம் 'பேவேரியா பேசியானா' என்ற மருந்தை கலந்து விதை நேர்த்தி செய்வது அவசியம். அல்லது, 'தையமெத்தாகாம்' மருந்தையும் விதை நேர்த்திக்கு பயன்படுத்தலாம். ஊடுபயிர் அல்லது வரப்பு பயிராக, தட்டைப்பயறு, அவரை, மொச்சை, எள் பயிரிட்டால், புழு தாக்குதலை கட்டுப்படுத்தலாம். விளக்குப் பொறி மற்றும் இனக்கவர்ச்சி பொறி அமைத்து, முதிர்ந்த புழுக்களை அழிக்கலாம்.

ரசாயன வழிமுறைபயிரிட்ட, 15 - 20ம் நாட்களில், 10 லிட்டர் தண்ணீரில், 20 மில்லி அசாடிரக்டின் ஒரு சதவீதம் அல்லது நுவாலுாரான், 10 சதவீதம் மருந்து, 15 மில்லி கலந்து தெளிக்கலாம்.40 - 45ம் நாட்களில் தயோடிகாரிப், 20 கிராம், 10 லிட்டர் தண்ணீரிலும்; 60 - 65ம் நாட்களில், புளூபென்டையமைட், 3 மில்லி, 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். வேறு வீரிய மருந்துகளை பயன்படுத்தக்கூடாது. பயன்படுத்தினால், படைப்புழு கூடுதல் எதிர்ப்பு சக்தியை பெற்று, கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும். இவ்வாறு, தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us