தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அது வெறும் காத்து இல்லீங்க... உடல் நலனுக்கு வைக்கும் வேட்டு

அது வெறும் காத்து இல்லீங்க... உடல் நலனுக்கு வைக்கும் வேட்டு

அது வெறும் காத்து இல்லீங்க... உடல் நலனுக்கு வைக்கும் வேட்டு


ADDED : செப் 05, 2019 02:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 05, 2019 02:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

'நாகரிக உணவுப் பழக்கம்'என்ற பெயரில், பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளையும், சாப்பிட துவங்கியது முதல் நம்மை பாடாய்படுத்தும் பிரச்னையாக மாறியுள்ளது, வாயு பிரச்னை.

இதனால் ஏற்படும் தொல்லைகள் தீர்க்க, வழி கூறுகிறார் இயற்கை மருத்துவ நிபுணர் ஸ்ரீகுமார்.

வாயு தொல்லையின் அறிகுறிகள் என்ன?

அஜீரணக் கோளாறால் ஏற்படும் பிரச்னை தான் வாயு கோளாறு. அஜீரணம், அடிக்கடி ஏப்பம் வருதல், வாயு பிரிதல், வயிற்று இரைச்சல், வயிற்று உப்புசம் ஆகிய அறிகுறிகள் இருக்கும். சிலர் நெஞ்சு, முதுகு, முழங்கால் மூட்டு, விலா, இடுப்பு, தோள்பட்டையில் ஏற்படும் வலிகளுக்கும் வாயு தான் காரணம் என, முடிவு செய்கின்றனர்.

நம் உடற்கூறு அமைப்பின்படி, சுவாசம், உணவுப்பாதை இந்த இரண்டு இடங்களில் மட்டுமே, வாயு இருக்க முடியும்.வாயு உருவாவதன் காரணம் என்ன?அவசரமாக, பேசிக்கொண்டே சாப்பிடும்போது, காபி, டீ, குளிர்பானங்களை உறிஞ்சிக் குடிக்கும்போது, நம்மை அறியாமலேயே காற்றையும் விழுங்கி விடுகிறோம். இதில், 80 சதவீதம் இரைப்பையிலிருந்து ஏப்பமாக வெளியேறி விடுகிறது. மீதி குடலுக்குச் சென்று, ஆசனவாய் வழியாக வெளியேறுகிறது.

அடுத்ததாக, குடலில் உணவு செரிக்கும்போது, அங்குள்ள பாக்டீரியாக்கள் நொதித்தல் மூலம் பலதரப்பட்ட வாயுக்கள் உற்பத்தியாகின்றன. நொதித்தல் முறையாக செயல்பட்டால் பிரச்னை இல்லை. தினமும் சுமார் 2 லிட்டர் வரை வாயு உற்பத்தியாகிறது. இது ரத்தத்தில் உறிஞ்சப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, சுவாசப்பாதை வழியாக வெளியேறுகிறது. இது நல்லதுதான்.

வாயு அதிகமாக பிரிவது ஏன்?

நாளொன்றுக்கு சராசரியாக, 15 முறை வாயு வெளியேறினால், கவலைப்பட தேவையில்லை. இதற்கு மேல் அளவு அதிகரித்தாலோ வயிற்றில் வலி, கடுமையான இரைச்சல், உப்புசம், புளித்த ஏப்பம் போன்றவை சேர்ந்து கொண்டாலோ, டாக்டரை பார்க்க வேண்டும்.

மலச்சிக்கல், குடல்புழுக்கள், அமீபியாசிஸ், பித்தப்பை கற்கள் போன்றவையும், வாயு உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். குடல் காசநோய், புற்றுநோய், கணைய நோய், கல்லீரல் நோய், குடலடைப்பு, குடல் எரிச்சல் நோய் போன்றவற்றால், குடலியக்கம் தடைபடும்போது வாயு அதிகமாகலாம்.

உடல் பருமன், அதிக நேரம் உட்கார்ந்து கொண்டே வேலை செய்பவர்கள், வயதானவர்கள், உடற்பயிற்சி இல்லாதவர்கள், உடலியக்கமின்றி முடங்கிக் கிடப்பது, தண்ணீர் குடிக்காதது ஆகியவற்றால் வாயு தொல்லை அதிகரிக்கிறது.

இதற்கு என்ன சிகிச்சை உள்ளது?

வாயுக்கு காரணம் உணவா, நோயா என்று மருத்துவரிடம் பரிசோதித்துக்கொண்டு, சிகிச்சை பெறுவது வாயு தொல்லையை நிரந்தரமாகத் தீர்க்க உதவும்.

என்ன உணவு தவிர்க்க வேண்டும்?

சிலவகை கொட்டைகள், பயறுகள், பொரித்த உணவுகளை குறைக்க வேண்டும். ஆவியில் தயாரித்த உணவுகளை அதிகரிக்க வேண்டும். தினமும் உடற்பயிற்சி, மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். வெற்றிலைப் பாக்கு, பான்மசாலா, மது, புகைப்பழக்கம் ஆகாது.இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us