/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடிநீர் இணைப்புக்கு ரூ.50 ஆயிரம் ஏன்? பட்டியல் வெளியிட்டது பிளம்பர் சங்கம்
/
குடிநீர் இணைப்புக்கு ரூ.50 ஆயிரம் ஏன்? பட்டியல் வெளியிட்டது பிளம்பர் சங்கம்
குடிநீர் இணைப்புக்கு ரூ.50 ஆயிரம் ஏன்? பட்டியல் வெளியிட்டது பிளம்பர் சங்கம்
குடிநீர் இணைப்புக்கு ரூ.50 ஆயிரம் ஏன்? பட்டியல் வெளியிட்டது பிளம்பர் சங்கம்
ADDED : நவ 10, 2019 03:54 AM
கோவை;'கோவை மாநகராட்சியில், புதிய குடிநீர் இணைப்பு பெற, எவ்வளவு செலவாகும்' என, உரிமம் பெற்ற பிளம்பர்கள் சங்கம் பட்டியல் வெளியிட்டுள்ளது.கோவை மாநகராட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, குடிநீர் இணைப்பு மீண்டும் வழங்கப்பட்டு வருகிறது. சீனியாரிட்டி அடிப்படையில், ஆன்லைன் முறையில் இணைப்பு வழங்க, 'சாப்ட்வேர்' உருவாக்கும் பணி தற்போதுதான் நடந்து வருகிறது.
அதனால், பழைய முறைப்படி, மண்டல அளவிலேயே, உதவி கமிஷனர்களின் முடிவின் படி, இணைப்பு வழங்கப்படுகிறது. குடிநீர் இணைப்பு பெற, ரூ.40 ஆயிரம் முதல், 50 ஆயிரம் வரை பிளம்பர்கள் கேட்பதாக, ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர், கோவை கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தனர்.இதைத்தொடர்ந்து, கோவை மாநகராட்சியின் உரிமம் பெற்ற பிளம்பர்கள் சங்கத்தினர், புதிய இணைப்பு வழங்க எத்தகைய நடைமுறை பின்பற்றப்படுகிறது. விண்ணப்பதாரர், எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என்பது தொடர்பாக, கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமிஷனருக்கு விளக்க கடிதம் கொடுத்தனர்.அதில், கூறியிருப்பதாவது:கோவை மாநகராட்சியில், புதிதாக குடிநீர் இணைப்பு பெற, மேற்பார்வை கட்டணம் ரூ.1,500 முதல், 9,500 வரை வசூலிக்கப்படுகிறது. இணைப்பு கட்டணம் ரூ.3,000 முதல், 7,500. காப்புத்தொகை வீடுகளுக்கு ரூ.5,000, தொழில் நிறுவனங்களுக்கு ரூ.10,000, அனுமதியற்ற கட்டடமாக இருப்பின், கட்டட உரிமம் மற்றும் இடிபாடுகளை அகற்றும் கட்டும், சதுரடிக்கு ரூ.12 வீதம், 1,000 சதுடிரயாக இருந்தால், ரூ.12,000 பெறப்படுகிறது.கட்டட வரைபட கட்டணம் ரூ.9,000 வரை வசூலிக்கப்படுகிறது.
வீட்டுக்கு வீடு கட்டணம் வித்தியாசப்படும். ரூ.50 ஆயிரம் என்பது புதிய குடிநீர் இணைப்பு பெற, மாநகராட்சி செலுத்த வேண்டிய கட்டணம் என்பதை தெளிவுபடுத்துகிறோம்.இவ்வாறு, கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.இதுதவிர, பிளம்பர் கட்டணம் ரூ.3,500 பெறப்படுகிறது. இணைப்பு கொடுப்பதற்கான குழாய் உள்ளிட்ட இதர பொருட்கள் வாங்க, சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரே செலவு செய்ய வேண்டும் என்பது, குறிப்பிடத்தக்கது.குடிநீர் இணைப்பு பெற, ரூ.40 ஆயிரம் முதல், 50 ஆயிரம் வரை பிளம்பர்கள் கேட்பதாக, ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர், கோவை கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தனர்.