தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/திருவாசகம், சிவபுராணம் படித்தால் நன்மை பெருகும்! ஆன்மிக சொற்பொழிவில் தகவல்

திருவாசகம், சிவபுராணம் படித்தால் நன்மை பெருகும்! ஆன்மிக சொற்பொழிவில் தகவல்

திருவாசகம், சிவபுராணம் படித்தால் நன்மை பெருகும்! ஆன்மிக சொற்பொழிவில் தகவல்


ADDED : மே 30, 2022 05:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 30, 2022 05:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி;திருவாசகம், சிவபுராணம் படிப்பதால் நன்மைகள் பெருகும், என, பொள்ளாச்சியில் நடந்த ஆன்மிக சொற்பொழிவில் தெரிவிக்கப்பட்டது.பொள்ளாச்சி ஜோதி நகர் சுவாமி விவேகானந்தர் கலை மற்றும் நற்பணி மன்றம் சார்பில், திருவாசகம், சிவபுராணம் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி, அருள்ஜோதி திருமண மண்டபத்தில் நடந்தது.பி.ஏ., கல்வி குழுமம் தாளாளர் அப்புகுட்டி தலைமை வகித்தார்.

நகராட்சி துணை தலைவர் கவுதமன், பொள்ளாச்சி கூட்டுறவு வீடமைப்பு சங்க துணை தலைவர் ஆறுச்சாமி மற்றும் சுவாமி விவேகானந்தர் கலை மற்றும் நற்பணி மன்றத்தினர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ரகுபதி வரவேற்றார். ஆனைமலை ஆர்ஷ வித்யா பீடம் ததேவானந்த சரஸ்வதி சுவாமிகள், பேரூர் பச்சாபாளையம் பிள்ளையார் பீடம் குருமகா சன்னிதானம் பொன்மணிவாசக அடிகளார், ஆர்.பி., குழுமம் தலைவர் பச்சையப்பன், ஜோதிநகர் சமரச சுத்த சன்மார்க்க சங்க தலைவர் ஜோதிமணி உள்பட பலர் பேசினர். பரமசிவம் நாச்சம்மாள் அறக்கட்டளை தலைவர் ஈஸ்வரமூர்த்தி, ராமானுஜா ேஹாட்டல் நிர்வாக இயக்குனர் ராஜேந்திர பூபதி உள்பட பலர் பங்கேற்று பேசினர்.சொற்பொழிவாளரான பேராசிரியர் மதுரை பொற்கிழில் கவிஞர் சுந்தரம் பேசியதாவது:மூலநுாலில் கிடைக்கும் இன்பம், மொழி பெயர்ப்பில் கிடைக்காது. திருவாசகம், சிவபுராணம் படிப்பதால் நன்மைகள் பெருகும்.ஆன்மாவானது கெட்டதை சீக்கிரமாக ஏற்றுக்கொள்ளும்; நல்லதை எடுத்துக்கொள்ள தாமதமாகும். மாயையை உண்மை என்றும், உண்மையை மாயை என்றும் நம்புகிறோம். எது உண்மை என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.ஒவ்வொருவரும் நமக்கு ஏன் இப்படி நடக்கிறது என புலம்புகிறோம்.

அவரவர் வினைக்கு தகுந்தாற்போல பிறவி இருக்கும். நமது வினைகள் முடியும் வரை உலகில் இருப்போம். திருவாசகம் படித்தால், முற்பிறவி மற்றும் இக்காலத்தில் உள்ள வினைகள் நீங்கும். சிவபுராணம், திருவாசகம் அனைவரும் படிக்க வேண்டும்.திருநாமத்துக்கு உள்ள பெருமை எதற்கும் இல்லை. மகிழ்ச்சியாக இருந்தால் பல நன்மைகள் கிடைக்கும். ஒவ்வொருவரும் சிரித்து மகிழ வேண்டும். இது ஆன்மிக பூமி என்பதை, இதுபோன்ற சொற்பொழிவு கூட்டத்துக்கு வரும் மக்களை காணும் போதே தெரிகிறது.இவ்வாறு, அவர் பேசினார்.இணை செயலாளர் முருகன் நன்றி தெரிவித்தார். முன்னாள் தலைமையாசிரியர் சங்கரவடிவேலு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us