மகிழ்ச்சி, களிப்பு, ஆனந்தம்:மூன்றுக்கும் வேறு அர்த்தம்
மகிழ்ச்சி, களிப்பு, ஆனந்தம்:மூன்றுக்கும் வேறு அர்த்தம்
ADDED : செப் 27, 2022 12:51 AM

அ நிறம் | அளவு
கோவை:கோவை கிக்கானி மேல்நிலைப்பள்ளியில் உள்ள சரோஜினி நடராஜர் கலையரங்கில், 'யாமறிந்த ஆத்ம தரிசனம்' எனும் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சொல்லோவியர் சுந்தரம் பேசுகையில், ''கடவுள் எங்கும் இருக்கிறார்.
உடையவன் அவன் நாமெல்லாம் வெறும் உடமைகள் தான். அறிவு என்பது கூட, கூட ஆசை குறைய வேண்டும். மகிழ்ச்சி, களிப்பு மற்றும் ஆனந்தம் இவை மூன்றும் வெவ்வேறு அர்த்தம் கொண்டவை. உடம்புக்கு களிப்பு, மனதுக்கு மகிழ்ச்சி, உயிருக்கு ஆனந்தம், என்பதை மனிதன் உணர வேண்டும்,'' என்றார்.
