UPDATED : பிப் 26, 2013 12:18 AM
ADDED : பிப் 25, 2013 09:08 PM
காட்டம்பட்டியில் கடந்த 13ம் தேதி முத்தோழையுடன், அரவான் திருவிழா துவங்கியது.முத்தோழைக்கு மாவிளக்கு வைத்தல், பூஜை, பூச்சாட்டுதல் ஆகியவை 14ம் தேதி நடந்தது. 18ம் தேதி கோவிலில், கம்பம் நடுதல் மற்றும் பூவோடு எடுத்தல் நடந்தது. காட்டம்பட்டி சுற்றுவட்டார மக்கள் பங்கேற்றனர்.
27ம் தேதி அதிகாலையில், சுவாமி அலங்காரத்துடன் மேடைக்கு எழுந்தருளுதல், அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தல் நடக்கிறது. மதியம் அரவானுக்கு மாவிளக்கு படைக்கப்பட்டு, வழிபாடு நடக்கிறது. இரவு சாமி பட்டி சுற்றி விளையாடும் வைபவம் நடக்கிறது. 28ம் தேதி காலை அனுமான் அரவானை தேடுதலும், மதியம் சாமி குளத்திற்கு செல்லுதலும், அன்னதானம் வழங்குதலும் நடக்கிறது.காட்டம்பட்டி கணேசர் பஜனை குழுவினரின் பஜனை, பிருந்தாவனம், பெண்கள் கும்மியாட்டம் நடக்கிறது. இரவு சாமி குளத்திலிருந்து கோவிலுக்கு எழுந்தருளுகிறார். இளைஞர் நற்பணி மன்றம் சார்பில், கலை நிகழ்ச்சி நடக்கிறது. மார்ச் 1ம் தேதி காலையில் விஸ்வரூப தரிசனமும், சாமி திருவீதியுலாவும், மாலையில் சாமியை கட்டு மரம் சேர்த்துதலும் நடக்கிறது. ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.