அறிவும், திறமையுமே பெண்களை அடையாளம் காட்ட வேண்டும்; ஆண்டாள் பிரியதர்ஷினி
அறிவும், திறமையுமே பெண்களை அடையாளம் காட்ட வேண்டும்; ஆண்டாள் பிரியதர்ஷினி
ADDED : மார் 12, 2014 02:53 AM
பெ.நா.பாளையம்:
''பெண்களை அவர்களுடைய அறிவும், திறமையுமே அடையாளம் காட்ட
வேண்டும்,'' என கோவை துார்தர்ஷன் மைய இயக்குநர் ஆண்டாள் பிரியதர்ஷினி
பேசினார்.துடியலுார் அருகே வட்டமலைபாளையத்தில் உள்ள ராமகிருஷ்ண
இன்ஜி., கல்லுாரி மகளிர் அதிகாரபரவல் மையத்தின் சார்பில் மகளிர்
தினவிழா கொண்டாடப்பட்டது.
கல்லுாரி முதல்வர் அலமேலு தலைமை
வகித்தார்.கோவை துார்தர்ஷன் மைய இயக்குனர் ஆண்டாள் பிரியதர்ஷினி
பேசுகையில், “பெண்களுக்குரிய தகுதியான இடத்தை இச்சமுதாயம்
இன்னும் வழங்கவில்லை; பணியாற்றும் இடம் உள்ளிட்ட பல்வேறு தளங்களில்
போதுமான உரிமைகள் வழங்கப்படவில்லை. பெண்மைக்கு முடிவு எடுக்கும்
பக்குவமோ, திறனோ இல்லை என்ற மூடத்தனமான நம்பிக்கை இன்னும் உள்ளது.
இதை உடைத்தெறிய வேண்டும்.பெண்மை பாதிக்கப்பட்டால் அடுத்த
தலைமுறையே பாதிக்கும். எதிர்கால சமுதாயத்தை திறம்பட காக்க வேண்டிய
பெரும் பொறுப்பு நம்மிடம் உள்ளது,'' என்றார்.
