தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ என்.ஜி.என்.ஜி. பள்ளியில்  மரக்கன்றுகள் தயார் 

 என்.ஜி.என்.ஜி. பள்ளியில்  மரக்கன்றுகள் தயார் 

 என்.ஜி.என்.ஜி. பள்ளியில்  மரக்கன்றுகள் தயார் 


ADDED : பிப் 07, 2026 05:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2026 05:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆனைமலை: ஆனைமலை அருகே, ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி. மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

ஆனைமலை அருகே, ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி. மேல்நிலைப்பள்ளியின் தேசிய பசுமைப்படை சார்பில், பள்ளியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதில், பள்ளியில் தினமும் பறவைகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வைக்கப்படுகிறது. மழைநீர் சேமித்தல், பயன்படுத்திய நீரை மீண்டும் நிலத்தில் சேமித்து வைத்தல், தொழு உரம் தயாரித்தல், காய்கறி தோட்டம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பள்ளி மாணவர்கள் சார்பில், ஆயிரம் மரங்கள் அடங்கிய அடர்வனம் பராமரிக்கப்படுகிறது.

பிளாஸ்டிக் இல்லா பள்ளி வளாகம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் செயல்பாடுகள் செயல்படுத்தப்படுகின்றன.

பள்ளியில் நாற்றுப்பண்ணை அமைத்து, மரக்கன்றுகள் வளர்க்கப்படுகின்றன. தற்போது, புங்கன், வேப்பம் போன்ற, 3,000 மரக்கன்றுகள் வளர்க்கப்படுகிறது.

மரங்கள் நடவு செய்து வளர்க்க விரும்புவோர், இலவச மரக்கன்றுகளை பெறுவதற்கு பள்ளியின் தலைமையாசிரியருக்கு கடிதம் கொடுத்து பெற்றுக்கொள்ளலாம், என, தேசியபசுமைப்படை பொறுப்பாசிரியர் பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us