/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய தரவரிசை பட்டியலில் என்.ஜி.பி.,
/
தேசிய தரவரிசை பட்டியலில் என்.ஜி.பி.,
ADDED : செப் 05, 2025 10:09 PM
கோவை:
மத்திய கல்வி அமைச்சகம் ஆண்டுதோறும் சிறப்பாக செயல்படும் கல்லுாரிகளின் தேசிய தர நிர்ணய மதிப்பீடுகளின் அடிப்படையில், தர வரிசை பட்டியலை வெளியிடுகிறது.
2025ம் ஆண்டுக்கான தர வரிசை பட்டியலில்,டாக்டர் என்.ஜி.பி., கலை அறிவியல் கல்லுாரி, 57.56 எனும் புள்ளி விகிதாச்சாரத்தின் அடிப்படையில், இந்திய அளவில் 66வது இடம் பிடித்து சிறப்பித்துள்ளது.
கடந்த எட்டு ஆண்டுகளாக, இந்திய அளவில் 100 இடங்களுக்குள் தரவரிசையில் இடம் பெற்று சிறப்புடன் விளங்கி வருகிறது. என்.ஜி.பி., கல்வி நிறுவனங்கள்தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி மற்றும் செயலர் டாக்டர் தவமணி தேவி ஆகியோரின் சிறப்பான நிர்வாகத்திறனின் கீழ் செயல்படுகிறது.
கற்றல், கற்பித்தல், ஆராய்ச்சி, தொழில்முறை பயிற்சி மற்றும் பட்டப்படிப்பு முடித்த மாணவர்களின் அகப்புற செயல்பாட்டுத்திறன் போன்றவற்றில் சிறப்பான மதிப்பீட்டால் இந்த இடம் கிடைத்துள்ளது, என, கல்லுாரி முதல்வர் தெரிவித்தார்.