/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஏ' மண்டல கபடி போட்டி என்.ஜி.பி. அணி சாம்பியன்
/
'ஏ' மண்டல கபடி போட்டி என்.ஜி.பி. அணி சாம்பியன்
ADDED : செப் 20, 2025 11:34 PM
கோவை : பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையேயான 'ஏ' மண்டல கபடி போட்டி, பல்கலை மைதானத்தில் இரு நாட்கள் நடந்தது. ஆண்களுக்கான இப்போட்டியில், 20 அணிகள் 'நாக் அவுட்' முறையில் விளையாடின.
பல்வேறு சுற்றுகளை அடுத்து நடந்த முதல் காலிறுதியில், என்.ஜி.பி., கல்லுாரி அணி, 34-7 என்ற புள்ளிகளில் ரத்தினம் கல்லுாரி அணியையும், இரண்டாம் போட்டியில் பயனீர் கலை அறிவியல் கல்லுாரி அணி, 31-13 என்ற புள்ளிகளில் மேட்டுப்பாளையம் அரசு கலைக் கல்லுாரி அணியையும் வென்றன.
தொடர்ந்து, பாரதியார் பல்கலை அணி, 32-15 என்ற புள்ளிகளில் எஸ்.என்.எஸ்., கலை அறிவியல் கல்லுாரி அணியையும், சி.எம்.எஸ்., கல்லுாரி அணி, 33-24 என்ற புள்ளிகளில் ஸ்ரீகுமரன் கல்லுாரி அணியையும் வென்றன.
முதல் அரையிறுதியில் பாரதியார் பல்கலை அணி, 36-14 என்ற புள்ளிகளில் பயனீர் கல்லுாரி அணியையும், இரண்டாம் அரையிறுதியில் என்.ஜி.பி., கல்லுாரி அணி, 57-14 என்ற புள்ளிகளில் சி.எம்.எஸ்., கல்லுாரி அணியையும் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
இறுதிப்போட்டியில், என்.ஜி.பி., கல்லுாரி அணி, 41-38 என்ற புள்ளிகளில் பாரதியார் பல்கலை அணியை வென்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. உடற்கல்வி துறை பேராசிரியர் குமரேசன், போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்தினார்.