ADDED : ஜூலை 18, 2025 09:34 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி, நாச்சிமுத்து இன்டஸ்டிரியல்ஸ் அசோசியேஷன் (என்.ஐ.ஏ.,) கல்வி நிறுவனங்களின் செயலாளராக சுப்ரமணியன் பொறுப்பேற்றார்.
இந்நிலையில், 'கிரேட் பிளேஸ் ஆப் ஒர்க்' என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில், இந்திய அளவில் சிறந்த பணி செய்யும் நிறுவனங்கள் பட்டியலில், என்.ஐ.ஏ., நிறுவனங்கள் இந்தாண்டு மூன்றாம் இடம் பிடித்துள்ளது.
மகாலிங்கம் பொறியியல் கல்லுாரியின் மாணவர்கள் மைக்ரோசாப்ட், அமேசான், ஐஸ்பே போன்ற உயர் தொழில்நுட்ப நிறுவனங்களின் அதிக சம்பளத்தில் பணியானை பெற்றுள்ளனர்.
சக்தி குழுமங்களின் தலைவரும், என்.ஐ.ஏ., நிறுவனங்களின் தலைவருமான மாணிக்கம், தாளாளர் ஹரிஹரசுதன், செயலாளராக பதவி உயர்வு ஆணை வழங்கி, சுப்ரமணியனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்களின் முதன்மை ஆலோசகர் கார்த்திக்கேயன் வாழ்த்து தெரிவித்தார்.