ADDED : ஏப் 21, 2025 09:00 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம், ;மேட்டுப்பாளையத்தில் இரவு நேர ரோந்தின் போது போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபடுகின்றனர்.
குற்ற தடுப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பல்வேறு இடங்களிலும் இரவு நேரங்களில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாகன தணிக்கையின் போது, வாகனங்களில் போதை பொருள் உள்ளதா, ஆயுதங்கள் ஏதேனும் உள்ளதா, வாகனங்களை யாராவது திருடி வந்துள்ளனரா, சந்தேகம்படும்படியான நபர்கள் உள்ளனரா, வழக்குகளில் தேடப்படும் நபர்கள் உள்ளனரா, என போலீசார் தீவிர சோதனையில் ஈடுபடுகின்றனர்.
மேலும், வாகன ஓட்டுனர்களிடம், மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்க கூடாது என போலீசார் அறிவுரையும் கூறுகின்றனர்.---