/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொங்கல் பண்டிகையை கொண்டாட ராட்டினம்!
/
பொங்கல் பண்டிகையை கொண்டாட ராட்டினம்!
ADDED : ஜன 15, 2024 12:46 AM

தொண்டாமுத்தூர்:தொண்டாமுத்தூரில், பொங்கல் பண்டிகையையொட்டி அமைக்கப்பட்டுள்ள ராட்டினங்களில், குழந்தைகள் பட்டாளம் விளையாடி மகிழ்ந்து வருகின்றனர்.
தமிழர்களின் பாரம்பரியத்தை வெளிக்காட்டும் பண்டிகையாக, பொங்கல் பண்டிகை உள்ளது. காலப்போக்கில், பொங்கல் பண்டிகை, வீட்டில் பொங்கல் வைப்பதோடு, பல இடங்களிலும் நின்றுவிடுகிறது.
இப்போது, கிராமப்புறங்களில், நம் பாரம்பரிய முறைப்படி, நம் கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில், பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
தொண்டாமுத்தூர் வட்டார பகுதியில், பொங்கல் பண்டிகையையொட்டி, கோவில் மைதானத்தில் பொம்மை கடைகள், ராட்டினம், பொங்கல் விளையாட்டு கடைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. பொங்கல் பண்டிகை என்றாலே, கரும்புக்குபின், குழந்தைகளுக்கு நினைவுக்கு வருவது, ராட்டினம் தான்.
இதனால், தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவில் மைதானத்தில், பொங்கல் பண்டிகையொட்டி அமைக்கப்பட்டுள்ள ராட்டினங்களில், குழந்தைகள் விளையாடி மகிழ்ந்து வருகின்றனர்.