/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீலகிரி வரையாடு நாள் சிறப்பு புகைப்பட அஞ்சல் அட்டை
/
நீலகிரி வரையாடு நாள் சிறப்பு புகைப்பட அஞ்சல் அட்டை
நீலகிரி வரையாடு நாள் சிறப்பு புகைப்பட அஞ்சல் அட்டை
நீலகிரி வரையாடு நாள் சிறப்பு புகைப்பட அஞ்சல் அட்டை
ADDED : அக் 12, 2025 11:45 PM
கோவை:பசுமை போர்த்திய புல்வெளிகளில் வசிக்கும் நீலகிரி வரையாடுகள், நம் மாநிலத்தின் பெருமைமிகு அடையாளம்.
அக். 7ம் தேதி நீலகிரி வரையாடு தினமாக கொண்டாடப்படும் நிலையில், இதன் குணாதிசயம், வாழ்விடம் குறித்த தகவல்கள், இவைகளின் அழகிய புகைப்படங்கள் அடங்கிய சிறப்பு அஞ்சல் அட்டை, சென்னை வண்டலுாரில் உள்ள உயர்நிலை வன உயிரினப் பாதுகாப்பு நிறுவனத்தில், கோவை அஞ்சல் கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
இத்தொகுப்பில், அழகிய புகைப்படங்கள், வரையாடுகள் குறித்த பல விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அஞ்சல் அட்டையை, தமிழக கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹு, கோவை தபால் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் சிவசங்கர் ஆகியோர் வெளியிட்டனர். வெளியிடப்பட்ட புகைப்பட தபால் அட்டை, கோவை தலைமை தபால் நிலையத்தில், ரூ.100க்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் இதை பயன்படுத்திக் கொள்ள, கோவை தபால் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் சிவசங்கர் அழைப்பு விடுத்துள்ளார்.