/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'டென்னிகாய்ட்' போட்டியில் வீராங்கனைகள் அபார ஆட்டம்
/
'டென்னிகாய்ட்' போட்டியில் வீராங்கனைகள் அபார ஆட்டம்
'டென்னிகாய்ட்' போட்டியில் வீராங்கனைகள் அபார ஆட்டம்
'டென்னிகாய்ட்' போட்டியில் வீராங்கனைகள் அபார ஆட்டம்
ADDED : அக் 12, 2025 11:45 PM
கோவை:கோவை வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள், இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில் கடந்த, 8ம் தேதி முதல் நடந்து வருகின்றன. பள்ளி மாணவ, மாணவியருக்கு சிலம்பம், ஜூடோ, டென்னிகாய்ட் போட்டிகள் இரு நாட்கள் நடந்தன.
அதன்படி, 19 வயதுக்குட்பட்ட மாணவியருக்கான(இரட்டையர் பிரிவு) போட்டியில், ஈக்விடாஸ் மெட்ரிக் பள்ளி மாணவியரான கரிஷ்மா, ஸ்நேகா ஆகியோர் முதலிடமும், அன்னுார் கே.ஜி., பெண்கள் பள்ளி மாணவியர் பூங்கொடி, குருதீபா ஆகியோர் இரண்டாம் இடமும், பிரசன்டேசன் பள்ளி மாணவியர் ஷிபா மெஹனாஸ், ஜெசீரா ஆகியோர் மூன்றாம் இடம் பிடித்தனர்.
ஒற்றையர் பிரிவில், ஈக்விடாஸ் பள்ளி மாணவி கரிஷ்மா, கே.ஜி., பெண்கள் பள்ளி மாணவி குருதீபா, சிறுமுகைபுதுார் பள்ளி மாணவி கார்த்திகாதேவி ஆகியோர், முதல் மூன்று இடங்களை பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.
14 வயதுக்குட்பட்ட மாணவியருக்கான(இரட்டையர்) போட்டியில் கே.ஜி., பெண்கள் பள்ளி மாணவியர் கீர்த்திஸ்ரீ, பிரீனா ஆகியோர் முதலிடமும், இன்பேன்ட் ஜீசஸ் பள்ளி மாணவியர் யாழினி, அனுஸ்ரீ ஆகியோர் இரண்டாம் இடமும், ஈக்விடாஸ் பள்ளி மாணவியர் கோபிகா, ஹரினி ஆகியோர் மூன்றாம் இடமும் பிடித்தனர்.
இரட்டையர் பிரிவு, 17 வயதுக்குட்பட்ட மாணவியருக்கான போட்டியில், ஈக்விடாஸ் பள்ளி மாணவியர் ஹென்சி, சஞ்சனா ஆகியோர் முதலிடமும், குளோபல் பாத்வேஸ் பள்ளி மாணவியர் வர்ஷினிகா, பிரியதர்ஷினி ஆகியோர் இரண்டாம் இடமும், பிரசன்டேசன் பள்ளி மாணவியர் ரேஷ்மிலா, ஸ்வேதா ஆகியோர் மூன்றாம் இடமும் பிடித்தனர்.