/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'நீலகிரி வரையாடுகளை இடம் மாற்ற திட்டம்'
/
'நீலகிரி வரையாடுகளை இடம் மாற்ற திட்டம்'
ADDED : ஜூலை 10, 2025 10:14 PM
தொண்டாமுத்துார்; மேற்குத்தொடர்ச்சி மலையில், வரையாடுகள் முன்பு இருந்த பகுதிகளில், மீண்டும் வரையாடுகளை இடப்பெயர்ச்சி செய்வது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து வருவதாக, நீலகிரி வரையாடு திட்ட இயக்குனர் கணேசன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
நீலகிரி வரையாடு திட்டம் இரண்டு ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 2024ம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இரண்டாம் ஆண்டாக இந்தாண்டும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கணக்கெடுப்பு அறிக்கையை விரைவில் முதல்வர் வெளியிடுவார்.
முக்கூர்த்தி தேசிய பூங்காவில் உள்ள, அந்நிய களைச்செடிகளை அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீலகிரி வரையாடு திட்டம் குறித்து பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
வரையாடு வாழ்விடங்களில் உள்ள பிரச்னைகள், அதற்கான தீர்வுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, மூன்று ஆராய்ச்சி கட்டுரைகள் வெளிவந்துள்ளன. மேற்கு தொடர்ச்சி மலைகளில், பழங்காலத்தில் வரையாடுகள் இருந்து, தற்போது இல்லாமல் உள்ள இடங்களுக்கு, வரையாடுகளை கொண்டு செல்வது தொடர்பாக, 6 மாதங்களில் நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.