ADDED : ஜன 31, 2024 12:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்: செட்டிபாளையம் சாலையில் உள்ள திருவாதிரை நகர் பேஸ் 11 பகுதியை சேர்ந்தவர் லிங்கம்சாமி, 55. கடந்த, 24ம் தேதி இவர் குடும்பத்துடன் தூத்துக்குடியில் உள்ள, குல தெய்வ கோவிலுக்கு சென்றார். நேற்று முன்தினம் காலை வீடு திரும்பினார்.
கோவில் பிரசாதத்தை வைக்க பீரோவை திறந்தவர் அதிலிருந்த தங்க நகை, மோதிரம், வளையல் என, ஒன்பதரை சவரன் ஆபரணங்கள் திருட்டு போயிருப்பதை கண்டார். போத்தனூர் புலனாய்வு பிரிவு போலீசில் கொடுத்த புகாரில், தனது வீட்டில் வசிக்கும் ராஜா இதனை செய்திருக்ககூடும் என குறிப்பிட்டுள்ளார். போலீசார் அவரிடம் விசாரிக்கின்றனர்.