தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவையில் ஒன்பது சத்துணவு மையங்களுக்கு கிடைத்தது ஐஎஸ்ஓ

 கோவையில் ஒன்பது சத்துணவு மையங்களுக்கு கிடைத்தது ஐஎஸ்ஓ

 கோவையில் ஒன்பது சத்துணவு மையங்களுக்கு கிடைத்தது ஐஎஸ்ஓ


ADDED : பிப் 08, 2026 05:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2026 05:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: சத்துணவு திட்டத்தின் கீழ் செயல்படும் ஒன்பது மையங்களுக்கு, மத்திய அரசின் இந்திய தர நிர்ணய சான்றிதழ் (ஐஎஸ்ஓ) வழங்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 1,274 சத்துணவு மையங்கள் உள்ளன. இங்கு, 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் 1,28,418 மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். 2023--2024 நிதியாண்டில் 4 சத்துணவு மையங்களுக்கு ஐஎஸ்ஓ சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 5 மையங்களுக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இதற்காக முன்னதாக, சமையலறையில் எல்பிஜி காஸ், மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் ஆய்வு செய்யப்பட்டன.

சத்துணவுத் துறை அதிகாரிகள் கூறுகையில், '2024--2025 நிதியாண்டில் மாவட்டத்தில் மொத்தம் 61 சத்துணவு மையங்களுக்கு ஐஎஸ்ஓ சான்றிதழ் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதில் முதற்கட்டமாக பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில்- 4, காரமடை- 1 என5 மையங்களுக்கு சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும் 10 மையங்களில் முதற்கட்ட ஆய்வுகள் நிறைவடைந்துள்ளன. பிற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில், கோவை மாவட்டத்தில் தரச் சான்றிதழ் பெற்ற மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us