/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெண்கள் கால்பந்து போட்டியில் நிர்மலா, பாரதியார் பல்கலை வெற்றி
/
பெண்கள் கால்பந்து போட்டியில் நிர்மலா, பாரதியார் பல்கலை வெற்றி
பெண்கள் கால்பந்து போட்டியில் நிர்மலா, பாரதியார் பல்கலை வெற்றி
பெண்கள் கால்பந்து போட்டியில் நிர்மலா, பாரதியார் பல்கலை வெற்றி
ADDED : ஆக 13, 2025 09:08 PM

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள யுனைடெட் கல்வி நிறுவன வளாகத்தில், பாரதியார் பல்கலைக்குட்பட்ட பெண்கள் கல்லூரிகளுக்கான கால்பந்து போட்டி நடந்தது.
பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள யுனைடெட் கல்வி நிறுவனங்களின், அங்கமான யுனைடெட் கலை, அறிவியல் கல்லூரியில் பாரதியார் பல்கலை உட்பட்ட பெண்களுக்கான கால்பந்து போட்டி நடந்து வருகிறது. 19 அணிகள் கலந்து கொள்கின்றன.
போட்டிகள், 'நாக் அவுட்' மற்றும் 'லீக்' முறையில் நடக்கிறது. போட்டியின் முடிவில், நிர்மலா கல்லூரி, பாரதியார் பல்கலை, மைக்கேல் ஜாப் மற்றும் வித்யாசாகர் கல்லூரி அணிகள் லீக் போட்டிக்கு தகுதி பெற்றன.
போட்டிகள் இன்றும் நடக்கின்றன. போட்டிகளை யுனைடெட் கலை, அறிவியல் கல்லூரியின் முதல்வர் விஜயா மற்றும் யுனைடெட் பிசியோதெரபி கல்லூரியின் முதல்வர் காயத்ரி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
போட்டிக்கான ஏற்பாடுகள், யுனைடெட் கல்வி நிறுவனங்களின் தலைவர் சண்முகம் தலைமையில் உடற்கல்வி இயக்குனர் சுரேஷ் செய்து இருந்தார்.