/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நுாலகர் நியமனமில்லை; அரசுப்பள்ளிகளில் புது பிரச்னை
/
நுாலகர் நியமனமில்லை; அரசுப்பள்ளிகளில் புது பிரச்னை
நுாலகர் நியமனமில்லை; அரசுப்பள்ளிகளில் புது பிரச்னை
நுாலகர் நியமனமில்லை; அரசுப்பள்ளிகளில் புது பிரச்னை
ADDED : செப் 30, 2025 07:58 AM
கோவை; தமிழக அரசு பள்ளிகளில் நூலகர் பணியிடங்கள் இல்லாததால், காலப்போக்கில், அரசு பள்ளிகளில் நூலகர் பணியிடங்கள் முற்றிலுமாக மறைந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மாணவர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த,அரசு ஆண்டுதோறும் பள்ளி நூலகங்களுக்கு புதிய புத்தகங்களை வழங்கி வருகிறது.
ஆனால், நூலக புத்தகங்களை பராமரிக்கவும், மாணவர்களுக்கு வழங்கி வழிநடத்தவும், மாநிலம் முழுவதும் செயல்படும், 37,554 அரசு பள்ளிகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே நூலகர்கள் உள்ளனர்.
செயல்படுத்த ஆளில்லை 2010 மற்றும் 2013ல், தொடங்கப்பட்ட 44 அரசு மாதிரிப் பள்ளிகளில், தொகுப்பூதிய அடிப்படையில் நூலகர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களில் 35 பேர் பணியாற்றி வருகின்றனர்; 9 பணியிடங்கள், 5 ஆண்டுகளாக காலியாக உள்ளன.
மாவட்டத்திற்கு ஒரு பள்ளி வீதம், சிறந்த பள்ளி தேர்வு செய்யப்பட்டு, அங்கு தொகுப்பூதியத்தில், நூலகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பெரும்பாலான பள்ளிகளில் நூலகங்களை நிர்வகிக்க ஆளில்லாததால், ஆசிரியர்களே கூடுதலாக கவனிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இது, அவர்களின் கற்பித்தல் பணியை பாதிக்கிறது. குறைந்தது 300 மாணவர்கள் படிக்கும் பள்ளிகளிலாவது, நிரந்தர நூலகர் பணியிடங்களை அரசு உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சரண்டர் செய்ய உத்தரவு ஆசிரியர்கள் கூறுகையில், '2013ல் பணி நியமனம் பெற்ற நூலகர்கள், ஓய்வு பெறும் போது, அந்த இடத்தை சரண்டர் செய்ய, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
'ஒழிவடையும் பணியிடம்' ஆக அறிவிக்கப்பட்டதால், எதிர்காலத்தில் அரசு பள்ளிகளில் நூலகர் என்ற பணியிடமே இருக்காது.
'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்பது வெறும் காகிதங்களில் இல்லாமல், களத்திலும் உண்மையாக இருக்க வேண்டும்' என்றனர்.