/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இளநீர் பண்ணை விலையில் இந்த வாரம் மாற்றமில்லை
/
இளநீர் பண்ணை விலையில் இந்த வாரம் மாற்றமில்லை
ADDED : மே 26, 2025 10:58 PM
பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையை ஒப்பிடுகையில், எவ்வித மாற்றமும் கிடையாது.
ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:
இந்த வாரம், தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீர் விலை, கடந்த வார விலையை ஒப்பிடுகையில், எவ்வித மாற்றமும் இன்றி, 47 ரூபாய் என நிர்ணயம் செய்யப்படுகிறது.
அதன்படி, ஒரு டன் இளநீரின் விலை, 19 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது, கர்நாடகா மாநில சந்தைகளில் இருந்து வரும் இளநீரின் வரத்து மிகவும் குறைய தொடங்கியுள்ளது.
அதேபோல, பொள்ளாச்சி பகுதிகளிலும் இளநீரின் உற்பத்தி மற்றும் வரத்து குறைந்துள்ளது. எடைக்கு விற்பனை செய்யும் விவசாயிகள் குறைந்தபட்சம், 37 நாட்கள் இடைவெளியில் இளநீர் அறுவடை செய்ய வேண்டும்.
இம்மாதம் மற்றும் ஜூன் மாதம், அதிகளவில் குறும்பை பிடிப்பு இருக்கும்போது, 'ஈரியோபைட்' சிலந்திப் பூச்சியின் தாக்குதல் துவங்கும். இதன் பாதிப்பு, நவ., மற்றும் டிச., மாதம் அறுவடை செய்யும் இளநீரில் அதிகம் காணப்படும்.
எனவே, முன்னெச்சரிக்கையாக உரிய மருந்து தெளித்து, சிலந்திப் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.