ADDED : டிச 23, 2024 05:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி: ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையுடன் ஒப்பிடுகையில் மாற்றமில்லை.
ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:
இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை, கடந்த வார விலையை ஒப்பிடுகையில் எவ்வித மாற்றமும் இன்றி, 22 ரூபாய் என நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு டன் இளநீரின் விலை, 8,250 ரூபாய் ஆகும். இந்த மாதம் இளநீர் அறுவடை எல்லா தோப்புகளிலும் உரிய காலத்தில் தேக்கமின்றி நடைபெற்று முடிந்துள்ளது.
வரக்கூடிய மாதத்தில் இளநீர் வரத்து குறைந்து காணப்படும். எனவே புத்தாண்டில் இளநீர் விலை உயரத் துவங்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.