ADDED : ஆக 30, 2026 05:32 PM

கோவை: யு.பி.ஐ., பயன்படுத்தும் சாதாரண நுகர்வோருக்கும் கட்டண சுமை ஏற்படுத்தாமல் இலவச பரிவர்த்தனை வழங்குமாறு, மத்திய அரசிடம் முறையிடப்பட்டுள்ளது.
சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோவை தலைவர் ஜெயராமன், செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அனுப்பியுள்ள மனு:
குறைந்த மதிப்பிலான யு.பி.ஐ., பரிவர்த்தனைகளுக்கு நுகர்வோரிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது, ‘டிஜிட்டல் இந்தியா’ திட்ட முன்னேற்றத்தை பாதிக்கும். இலவசமாகவே இருக்க வேண்டும்.
வழக்கத்திற்கு மாறாக அதிக மதிப்பிலான பரிவர்த்தனைகளை கண்காணிக்கலாம். சாதாரண நுகர்வோருக்கு கட்டணச் சுமை கூடாது.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்க, ஊக்கத்தொகை அல்லது வெகுமதி திட்டங்களை பரிசீலிக்க வேண்டும்.
சாதாரண மக்களிடம் குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிப்பு கட்டணம், காசோலை புத்தகம், ஏ.டி.எம். பயன்பாடு உள்ளிட்டவற்றுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
யு.பி.ஐ., பரிவர்த்தனைகளை தொடர்ந்து இலவசமாக வைத்திருப்பதுடன், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மேலும் வலுப்படும் அணுகுமுறையை அரசு பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.
