ADDED : ஆக 30, 2026 05:32 PM
கோவை: வெள்ளலூர் குப்பை கிடங்கு கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதற்கான டெண்டர் ஜூலை 31ம் தேதியுடன் நிறைவடைவதாக இருந்தது. அமைச்சர் விக்னேஷிடம் குறிச்சி வெள்ளலுார் மாசு தடுப்பு கூட்டுக்குழு திட்டத்தை கைவிட மனு அளித்தனர். டெண்டருக்கு விண்ணப்பிக்கும் தேதி ஆக. 31 வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது செப்.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
குறிச்சி -வெள்ளலூர் மாசு தடுப்பு கூட்டுக்குழு செயலர் மோகன் கூறுகையில், ‘‘வெள்ளலூர் குப்பை கிடங்குக்கு மாற்று இடம் கண்டறிய வேண்டும். பழைய குப்பையை அறிவியல் முறையில் அகற்ற, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இதுவரை தீர்வு காணவில்லை. சுற்றுப்புற சூழல் பாதிப்பு, கடும் துர்நாற்றம், நிலத்தடி நீர் மாசு, அடிக்கடி ஏற்படும் தீ விபத்து ஆகியவற்றுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். டெண்டர் நடைமுறையை ரத்து செய்து, மின் உற்பத்தி திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும்,’’ என்றார்.
