/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பிரஸ் என்கிளேவ் கடைகள் பதிவில் மோசடி கிடையாது'
/
'பிரஸ் என்கிளேவ் கடைகள் பதிவில் மோசடி கிடையாது'
ADDED : மார் 07, 2024 03:36 AM
கோவை, : கோவைப்புதுார் பிரஸ் என்கிளேவ் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கை:
பத்திரிகையாளர்களுக்கு கோவைப்புதுாரில், 10.36 ஏக்கரில் தனியாரிடம் நிலம் வாங்கப்பட்டது. 'பிரஸ் கிளப்' பெயரில், அதன் தலைவருக்கு அதிகாரம் அளித்து, அவர் பெயரில் நிலத்தை கிரயம் செய்து, வீட்டு மனைகளாக பிரித்து, அனைவருக்கும் பதிவு செய்து தர ஒப்புதல் பெறப்பட்டது. அதன்படி, பத்திரிகையாளர்கள் நிலம் வாங்க பணம் செலுத்தினர். 113 வீட்டு மனைகள் பிரித்து தரப்பட்டன.
பிரஸ் கிளப்பிலிருந்து எந்த பணமும், பிரஸ் என்கிளேவ் நிர்மாணிக்க பெறப்படவில்லை. எனவே, நிலத்திற்கு, பிரஸ் கிளப் உரிமை கோர முடியாது.
பிரஸ் கிளப் தலைவர் பெயரில் நிலம் இருந்ததால், பயனாளிகளின் ஒப்புதலோடு, பிரஸ் என்கிளேவின் வெல்பேர் சொசைட்டி தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் பெயரில், 2 கடை மனைகளை பதிவு செய்து தரவும், 'என்கிளேவ் வெல்பர் சொசைட்டி' பொதுக்குழு கூட்டத்தில் 2 கடை மனைகளிலும், கடைகள் கட்டவும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடை மனைகள் மோசடியாக பதியப்படவில்லை. ஆனால், உண்மைக்கு மாறாக தற்போதைய பிரஸ் கிளப் நிர்வாகிகள் அளித்த புகாரில், வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

