/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மதிய உணவு கிடையாது மாணவர்களிடம் விசாரணை
/
மதிய உணவு கிடையாது மாணவர்களிடம் விசாரணை
ADDED : ஆக 12, 2025 09:18 PM

கோவை, ; அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களிடம், மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் மணிமேகலை விசாரணை நடத்தினார்.
நேற்றைய நமது நாளிதழில், வெள்ளக்கிணறிலுள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி விடுதி மாணவர்கள் தங்கும் சமூக நீதி விடுதியில், மதிய உணவு வழங்காதது குறித்து, செய்தி வெளியானது.
இதையடுத்து, மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் மணிமேகலை, விடுதி வார்டன் சண்முகபாண்டியை அழைத்து விசாரித்ததோடு, நேரடியாக அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கு சென்றார்.
அங்கு வகுப்பிலிருந்த மாணவர்களை அழைத்து, விசாரணை மேற்கொண்டார். அவர்களது தேவை என்ன என்பதையும், அவர்களது பிரச்னை குறித்தும் விசாரித்து பதிவு செய்தார். வார்டனுக்கு அறிவுரை வழங்கினார்.