/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருமண பத்திரிகையில் பெயரில்லை; மனைவிக்கு கணவர் அரிவாள் வெட்டு
/
திருமண பத்திரிகையில் பெயரில்லை; மனைவிக்கு கணவர் அரிவாள் வெட்டு
திருமண பத்திரிகையில் பெயரில்லை; மனைவிக்கு கணவர் அரிவாள் வெட்டு
திருமண பத்திரிகையில் பெயரில்லை; மனைவிக்கு கணவர் அரிவாள் வெட்டு
ADDED : மே 02, 2025 09:38 PM
கோவை; மகளின் திருமண பத்திரிக்கையில் பெயர் போடாததால், மனைவியை அரிவாளால் வெட்டியவர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
ஒண்டிப்புதுார், சவுடம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஹரிபிரியா, 49; கணவர் கிருஷ்ணமூர்த்தி, 53. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக, ஹரிபிரியா கணவரை பிரிந்து, மகள்களுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், ஹரிபிரியா தனது மூத்த மகளுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தார்.
திருமணத்திற்கு பத்திரிக்கை அச்சிட்டு, அக்கம் பக்கத்தினருக்கு கொடுத்து வந்தார். இதை அறிந்த, கிருஷ்ணமூர்த்தி, தனது மகள் திருமண பத்திரிகையில், தனது பெயர் இல்லாததால் ஆத்திரமடைந்தார். ஹரிபிரியாவின் வீட்டுக்கு சென்று, தகராறில் ஈடுபட்டார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், தகாத வார்த்தைகளால் திட்டி, ஹரிபிரியாவை அரிவாளால் தாக்கினார். இதில் அவருக்கு, கழுத்து, தலை, கை உள்ளிட்ட இடங்களில், காயம் ஏற்பட்டது.
ஹரிபிரியா சிங்காநல்லுார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.