/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓராண்டுக்கு நம்பிக்கையில்லா தீர்மானம் இல்லை! நகராட்சி தலைவருக்கு சிக்கல் நீங்கியது
/
ஓராண்டுக்கு நம்பிக்கையில்லா தீர்மானம் இல்லை! நகராட்சி தலைவருக்கு சிக்கல் நீங்கியது
ஓராண்டுக்கு நம்பிக்கையில்லா தீர்மானம் இல்லை! நகராட்சி தலைவருக்கு சிக்கல் நீங்கியது
ஓராண்டுக்கு நம்பிக்கையில்லா தீர்மானம் இல்லை! நகராட்சி தலைவருக்கு சிக்கல் நீங்கியது
ADDED : ஆக 14, 2025 08:31 PM
வால்பாறை; வால்பாறை நகராட்சி தலைவரை பதவி நீக்கம் செய்யும் வகையில், தி.மு.க. கவுன்சிலர்கள் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றாமல், கூட்டம் ரத்து செய்யப்பட்டதால், ஓராண்டுக்கு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடியாது.
வால்பாறை நகராட்சியில் மொத்தம், 21 வார்டுகள் உள்ளன. இதில் 19 வார்டுகள் தி.மு.க. வசமும், அ.தி.மு.க. - வி.சி. வசம் தலா ஒரு வார்டும் உள்ளன. நகராட்சி தலைவராக தி.மு.க.வை சேர்ந்த அழகுசுந்தரவள்ளி உள்ளார்.
இந்நிலையில், கடந்த ஆறு மாதத்திற்கு மேலாக தலைவர் மற்றும் கவுன்சிலர்களிடையே கருத்து வேறுபாடு காரணமாக மன்றக்கூட்டமும் நடைபெறவில்லை. இதனால், வார்டுகளில் வளர்ச்சிப்பணிகள் பாதித்துள்ளன.
இந்நிலையில், தி.மு.க. - அ.தி.மு.க. - வி.சி. உள்ளிட்ட, 14 கவுன்சிலர்கள் நகராட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என கமிஷனரிடம் மனு கொடுத்தனர். அதன் அடிப்படையில் கடந்த, 7ம் தேதி ரகசிய வாக்கெடுப்பு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் நடந்தது.
வால்பாறையில் நடந்த கூட்டத்தில், 21வது வார்டு கவுன்சிலர் மட்டும் பங்கேற்ற நிலையில், மீதமுள்ள 13 கவுன்சிலர்கள் நகராட்சி நுழைவுவாயிலின் முன், மொபைல்போன் கொண்டு செல்ல அனுமதிக்காததால், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால், குறித்த நேரத்துக்கு கவுன்சிலர்கள் உள்ளே செல்லாததால், தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. கூட்டமும் ரத்து செய்யப்பட்டதாக கமிஷனர் தெரிவித்தார்.
இந்நிலையில், ஆவேசமடைந்த கவுன்சிலர்கள், அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, மாவட்ட கலெக்டரிடமும் நேரில் புகார் தெரிவித்தனர். இதனிடையே நகராட்சி தலைவரை பதவி நீக்கம் செய்ய கவுன்சிலர்கள் போட்ட திட்டம் சொதப்பலில் முடிந்ததால், கடும் அதிருப்தியில் உள்ளனர்.
நகராட்சி கமிஷனர்(பொ) கணேசன் கூறியதாவது:
வால்பாறை நகராட்சி கவுன்சிலர்கள் கொடுத்த கடிதத்தின் அடிப்படையில், தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் வகையில், ரகசிய வாக்கெடுப்பு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
ஆனால், குறிப்பிட்ட நேரம் வரை பெரும்பான்மை கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்காததால், ரகசிய ஓட்டெடுப்பு ரத்து செய்யப்பட்டது. இனி ஓராண்டுக்கு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கவுன்சிலர்களால் கொண்டுவர முடியாது. மன்றக்கூட்டம் வழக்கம் போல் நடைபெறும், ஏழு கவுன்சிலர்கள் இருந்தாலே மன்றக்கூட்டம் நடத்தலாம்.
இவ்வாறு, கூறினார்.