/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலையோரம் அம்மன் சிலை யாருக்கும் அக்கறையில்லை
/
சாலையோரம் அம்மன் சிலை யாருக்கும் அக்கறையில்லை
ADDED : ஜன 22, 2025 11:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்; கோவைபுதூரிலிருந்து பேரூர் செல்லும் வழியில், பெரியகுளம் உள்ளது. இச்சாலையின் வலதுபுறம் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
அப்போது சுமார் மூன்றடி உயரமுடைய, அம்மன் சிலை ஒன்று காணப்பட்டது. தொழிலாளர்கள் சிலையை சாலையின் ஓரத்தில் வைத்து சென்றனர்.
ஒரே கருங்கல்லில் செதுக்கப்பட்ட இச்சிலை, அப்பகுதியிலுள்ள ஏதேனும் கோவிலுக்கு சொந்தமானதா அல்லது பழங்கால சிலையா என தெரியவில்லை. சிறு அளவில் சேதமடைந்துள்ள இச்சிலையை, உரிய துறையினர் மீட்டு, பத்திரப்படுத்த வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

