/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாலித்தீன் கழிவால் கால்நடைகளுக்கு ஆபத்து அறிவிப்பை யாரும் பொருட்படுத்துவதில்லை
/
பாலித்தீன் கழிவால் கால்நடைகளுக்கு ஆபத்து அறிவிப்பை யாரும் பொருட்படுத்துவதில்லை
பாலித்தீன் கழிவால் கால்நடைகளுக்கு ஆபத்து அறிவிப்பை யாரும் பொருட்படுத்துவதில்லை
பாலித்தீன் கழிவால் கால்நடைகளுக்கு ஆபத்து அறிவிப்பை யாரும் பொருட்படுத்துவதில்லை
ADDED : அக் 02, 2025 10:36 PM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், குப்பை கொட்டக்கூடாது என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தாலும் அதனை எவரும் பொருட்படுத்துவதில்லை.
பொள்ளாச்சி கிராமப்புறங்களில், ரோடுகளில் சுற்றித்திரியும் கால்நடைகள் ரோட்டோரம் உள்ள புற்களை உண்டு பசியாற்றி வருகின்றன. நகரப்பகுதியில் எங்கே உணவு கிடைக்கும் என கூட்டம் கூட்டமாக கால்நடைகள் ரோட்டில் வலம் வருகின்றன.
ஒரு சில இடங்களில், மாடு உள்ளிட்ட கால்நடைகள், குப்பை கழிவுகளில் வீசப்படும் அழுகிய காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்களை உட்கொள்ளும் அவல நிலை உள்ளது. ரோட்டோரம் குப்பையோடு குப்பையாக கிடக்கும் கழிவுகளை சாப்பிடுவதோடு, பாலித்தீன் கழிவுகளையும் உட்கொள்கின்றன. உணவுக்குழாயில் பிளாஸ்டிக் கழிவுகள் அடைத்துக் கொண்டால், கால்நடைகள் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
பொள்ளாச்சியில் பாலித்தீன் பொருட்கள் பயன்படுத்தக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், அதன் பயன்பாடு குறையவில்லை. பொருட்கள் வாங்கிச் செல்லும் பாலித்தீன் கவர்களை தரம் பிரித்து துாய்மை பணியாளர்களிடம் வழங்குவதில்லை. அவற்றை, குப்பையோடு குப்பையாக ரோட்டோரம் வீசுகின்றனர்.
அவற்றில் உள்ள உணவை உட்கொள்ள முயற்சிக்கும் கால்நடைகள், பாலித்தீன் கவர்களையும் சேர்த்து விழுங்குகின்றன. அதன்பின் ஏற்படும் உடல் உபாதைகளால் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகின்றன.
அதிலும், 'குப்பை கொட்டக் கூடாது' என எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ள இடத்திலேயே பாலித்தீன் கழிவுகள் மூட்டையாக கொட்டி வைக்கப்படுவது வேடிக்கையாக உள்ளது. கால்நடை வளர்ப்போரும் மேய்ச்சலுக்கு விட்டு சென்று விடுகின்றனர். அவை, பாலித்தீன் கவரை உட்கொள்வதை கவனிப்பதில்லை. இதனால், அவற்றின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது.
இவ்வாறு, கூறினர்.