தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாநில, தென்மாநில தடகளம்: எஸ்.டி.சி. மாணவர்கள் வெற்றி

மாநில, தென்மாநில தடகளம்: எஸ்.டி.சி. மாணவர்கள் வெற்றி

மாநில, தென்மாநில தடகளம்: எஸ்.டி.சி. மாணவர்கள் வெற்றி


ADDED : அக் 02, 2025 10:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 02, 2025 10:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி:பொள்ளாச்சி எஸ்.டி.சி. மாணவர்கள், மாநில, தென்மாநில அளவிலான தடகள போட்டிகளில் வெற்றி பெற்றனர்.

தமிழக தடகள சங்கத்தின் சார்பில், 39வது மாநில ஜூனியர் (20 வயதுக்கு உட்பட்டோர்) பிரிவு தடகள போட்டிகள், சென்னை தமிழ்நாடு உடற்கல்வியியல் பல்கலையில் நடந்தது. பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லுாரி மாணவர்கள் வேதப்பிரியன், டெக்கத்லான் போட்டியில், 6,277 புள்ளிகளுடன் தங்க பதக்கத்தையும், மாதேஷ் பெவின்ராஜ் 5000 மீ., ஓட்டத்தில், 16:25:58 நிமிடங்களில் கடந்து வெண்கல பதக்கத்தை வென்றனர்.

மாணவர் வேதப்பிரியன், ஆந்திரா மாநிலம் குண்டூரில் நடந்த, 36வது தென்மாநில தடகள போட்டியில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்று, டெக்கத்லான் போட்டியில், 6,172 புள்ளிகள் பெற்றுவெள்ளி பதக்கத்தை வென்றார்.

சாதனை மாணவர்களை கல்லுாரியின் தலைவர் வெங்கடேஷ், துணை தலைவர் விஜயமோகன், செயலர் சேதுபதி, முதல்வர் வனிதாமணி, துணை முதல்வர் பாரதி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us