UPDATED : ஏப் 26, 2026 04:23 AM
ADDED : ஏப் 26, 2026 04:22 AM

அ நிறம் | அளவு
உ டல் வலி என்றால், குழந்தைகளை முதுகில் ஏறி மிதிக்க சொல்வது எளிய தீர்வாக இருந்தது. இன்று தொழில்நுட்பம் அந்த இடத்தை பிடித்துள்ளது.
செம்மொழி பூங்காவில் இந்த மாற்றத்தை பார்க்கலாம். அங்குள்ள மசாஜ் இயந்திரங்களை பயன்படுத்திய மக்கள் முகத்தில், 'ஆகா இப்பதான் கொஞ்சம் ரிலாக்ஸ்' பாவனை!
வீட்ல வேலை அதிகமா இருக்கும். உடம்பு வலிச்சா, சுடுதண்ணி வச்சு ஊத்திப்போம். அல்லது ஒத்தடம் குடுப்போம். இந்த மெஷின்ல உக்காரும் போது 'அப்பாடா...'னு ஒரு நிம்மதி வந்துச்சு. என்ன இருந்தாலும் இந்த டெக்னாலஜி ரேஞ்ச் வேற தான். -- அனு நரசிம்மநாயக்கன்பாளையம்
உடம்பு வலி அதிகமா இருக்கும்போது குழந்தைகளை முதுகில் மிதிக்க சொல்லுவேன். சில சமயங்கள்ல ஒய்பும் மிதிப்பார். ஆனா, இந்த மசாஜர் மெஷின்ல ஒரு 10 நிமிஷம் தான் இருந்தேன்... செம ரிலாக்ஸா இருந்துச்சு. இந்த அனுபவம் ரொம்ப புதுசு. - தர்மேந்திரா டிவிஎஸ் நகர்.
இந்த மெஷினை டி.வி.,ல பாத்திருக்கேன். மத்தவங்க சொல்லி கேட்டிருக்கேன். நம்பாம இருந்தேன். இன்னிக்கு முதல்முறையா அனுபவிச்சப்போ, அது ஒரு 'சுகமான வலி'யா இருந்துச்சு. -- வேந்தன் சொக்கம்பட்டி
