/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆதார் பதிய ஆள் இல்லை: மக்கள் ஏமாற்றம்
/
ஆதார் பதிய ஆள் இல்லை: மக்கள் ஏமாற்றம்
ADDED : நவ 07, 2024 08:00 PM
வால்பாறை; வால்பாறை போஸ்ட் ஆபீசில், ஆதார் பதிவுக்கு ஆள் நியமிக்காததால், மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்கின்றனர்.
வால்பாறை தலைமை தபால்நிலையத்தில், சிறுசேமிப்பு கணக்கு, செல்வமகள் சேமிப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் சேர்ந்து, மக்கள் பயன்பெறுகின்னர்.
கடந்த, ஓராண்டாக வால்பாறை போஸ்ட் ஆபீசில், ரயில் முன் பதிவு செய்யப்படுகிறது. இந்த முன் பதிவு திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இங்கு ஊழியர் பற்றாக்குறையால், பல்வேறு பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அலுவலக பணிக்காக, 7 பேர் பணியாற்ற வேண்டிய நிலையில் தற்போது, 3 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.
இதனால், ஆதார் பதிவு மையம் இருந்தும், பதிவு செய்ய ஆள் இல்லாததால், வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்கின்றனர்.
இது குறித்து வாடிக்கையாளர்கள் கூறியதாவது: வால்பாறை போஸ்ட் ஆபீசில், மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தி வந்தாலும், ஆள் பற்றாக்குறையால், வாடிக்கையாளர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இங்கு, ஆதார் சேவை மையம் துவங்கி மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும், இதற்காக ஆட்கள் இன்று வரை நியமிக்கப்படாததால், காட்சிப்பொருளாக மாறி வருகிறது.
இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, மக்களின் நலன் கருதி போஸ்ட் ஆபீசில் ஆதார் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

