/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எவர் பெயரும் விடுபடாது; கலெக்டர் தகவல்
/
எவர் பெயரும் விடுபடாது; கலெக்டர் தகவல்
ADDED : நவ 06, 2025 11:33 PM
கோவை: ''ஒரே ஒரு வாக்காளரின் பெயர் கூட நீக்கப்படாத வகையில் தீவிர சிறப்பு திருத்த பணியை நடத்தி வருகிறோம்'' என்று கோவை கலெக்டர் பவன்குமார் தெரிவித்தார்.
அவர் நமது நிருபரிடம் கூறியதாவது:
தகுதியுள்ள வாக்காளர் ஒருவருடைய ஓட்டு கூட தவறவோ விடுபடவோ கூடாது என்பதற்காகவே வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்த பணி நடக்கிறது. வாக்காளர்கள் மற்றும் ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய உதவி மையங்கள் ஒவ்வொரு பூத்திலும் நிறுவப்பட்டுள்ளது.
ஆன்லைனில் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் வழங்கப்பட்டுள்ளது. படிவத்தில் வாக்காளர் மொபைல் எண் இருக்கும் என்பதால், சந்தேகம் இருப்பின் நிலைய அலுவலரே அழைத்து விவரம் கேட்பார்.
ஒரு தெரு, இரண்டு தெரு தள்ளி வசிப்பவர்கள் நிலைய அலுவலரை தொடர்பு கொண்டு படிவங்களை பெற்றுக்கொள்ளலாம்.வெளிநாடு சென்றவர்கள், வெளியூர்களில் வசிப்போர் படிவத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்து சமர்பிக்கலாம்.
இப்பணியில் சில நெருக்கடிகள் இருந்தாலும் அதை முழுமையாக நிறைவு செய்ய ஓட்டுச்சாவடி நிலைய அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏராளமான தன்னார்வலர்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதனால் வாக்காளர்களின் சந்தேகங்கள் வேண்டுகோள்கள் அனைத்தும் நிறைவு செய்யப்படும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.

