தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அரசு பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லை; கேள்விக்குறியாகும் பாதுகாப்பு

அரசு பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லை; கேள்விக்குறியாகும் பாதுகாப்பு

அரசு பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லை; கேள்விக்குறியாகும் பாதுகாப்பு


ADDED : ஜூலை 15, 2025 08:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 15, 2025 08:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வால்பாறை; ரொட்டிக்கடை அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால், மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறிவருகிறது.

வால்பாறையிலிருந்து, 6 கி.மீ., தொலைவில் உள்ளது ரொட்டிக்கடை. இங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை மொத்தம், 46 மாணவர்கள் படிக்கின்றனர்.

இந்த பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், மாணவர்களின் சேர்க்கை ஆண்டு தோறும் சரிந்து வருகிறது.

பள்ளியின் பின்புறம் புதர் மண்டிக்கிடப்பதால், அடிக்கடி சிறுத்தை பள்ளிக்கு விசிட் செய்கிறது. மேலும் மயானத்தை ஒட்டி பள்ளி செயல்படுவதாலும், பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததாலும், மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறி வருகிறது. இதனால் இந்தப்பகுதியை சுற்றியுள்ள பெரும்பாலான மாணவர்கள், வால்பாறை நகரில் உள்ள பள்ளிகளில் சேர்ந்து படிக்கின்றனர்.

கடந்த கல்வியாண்டில் 61 மாணவர்கள் படித்து வந்த நிலையில், இந்த கல்வியாண்டில், 46 மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர்.

பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ்குமாரிடம் கேட்ட போது, ''பள்ளியில் நான்கு கட்டடங்கள் உள்ளன. ஆனால் மழை காலத்தில் மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்து படிக்க முடியாத அளவிற்கு, மழை நீர் வகுப்பறையில் தேங்கி நிற்கிறது. பள்ளி வகுப்பறைகளுக்கு மேற்கூரை அமைத்துத்தரவும், சுற்றுச்சுவர் கட்டித்தரவும் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us