/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இடமும் கிடைக்கவில்லை எல்லையும் முடிவாகவில்லை
/
இடமும் கிடைக்கவில்லை எல்லையும் முடிவாகவில்லை
ADDED : நவ 08, 2025 11:26 PM
சூலூர்: நீலம்பூரில் புதிய போலீஸ் ஸ்டேஷன் துவக்க, இதுவரை இடமும் கிடைக்கவில்லை; எல்லையும் முடிவாகவில்லை என்பதால், பணிகள் தொய்வடைந்துள்ளன.
பட்ஜெட் கூட்டத்தொடரில், போலீஸ் மானிய கோரிக்கையில், சூலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நீலம்பூரில், ரூ. 4.88 கோடி செலவில், புதிய போலீஸ் ஸ்டேஷன் துவக்கப்படும், என, முதல்வர் அறிவித்திருந்தார்.
இதை தொடர்ந்து, புதிய ஸ்டேஷன் கட்ட அரசு நிலத்தை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.
இந்நிலையில், காலியாக உள்ள அரசு கட்டடத்தை தேர்வு செய்து, அதில் உடனடியாக ஸ்டேஷன் துவக்கும் பணியில், போலீசார் தீவிரம் காட்டினர்.
இதுவரை எந்த இடமும் கிடைக்கவில்லை. போலீஸ் ஸ்டேஷன் எல்லையும் இதுவரை முடிவு செய்யப்படவில்லை.
பல மாதங்களாக தேடியும் தகுதியான இடத்தை தேர்வு செய்ய முடியாமல், போலீசார் திணறி வருவதால், பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

